தமிழ்லீடர்

வெளிநாடு இருந்து நாடு கடத்தப்பட்ட  பலர் கட்டுநாயக்காவில் கைது!

பிரான்ஸில் இருந்து இன்று நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாகவும்,
இதில் 64 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 54 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே அதிகம் என விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களும் அடங்கியுள்ளார்கள்.

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் செல்லும் நோக்கில் ரீயூனியன் தீவினை சென்றடைந்தவர்களே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடல் வழியாக ரீயூனியன் தீவிற்கு சென்று, பிரான்ஸிற்குள் சென்றடையும் சந்தர்ப்பத்தில், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸிற்கு சொந்தமான போயிங் 737 – 800 ரக விசேட  விமானம் ஊடாக இன்று பிற்பகல் 2.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாகவும், விமானத்தில் பிரானஸ் நாட்டு அதிகாரிகள் 70 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் மாலை 4.30 மணியளவில் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நோக்கி சென்றுள்ளார்கள்.

நாடு கடத்தப்பட்ட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, குற்ற விசாரணை பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                         

Add comment

Recent Posts

%d bloggers like this: