தமிழ்லீடர்

வெளிநாட்டில் சிக்கிய இலங்கையரின் வீட்டில் இராணுவ சீருடைகள், வெடி பொருட்கள் மீட்பு!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகதுரே மதுஷின் உதவியாளரான ஜங்கா என்ற போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டில் இராணுவ சீருடைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

கந்தர பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் 18 இராணுவ சீருடைகள், டீ 56 ரக துப்பாக்கிகளுக்குரிய 26 தோட்டாக்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டுபாயில் கைது செய்யப்பட்ட மாகதுரே மதுஷுடன் ஜங்கா கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பிரதேச பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, இராணுவ சீருடைகளுடன் போதை பொருள் வர்த்தகர் ஜங்கா என்று அழைக்கப்படும் நபரின் சித்தப்பாவும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.                           

Add comment

Recent Posts

%d bloggers like this: