வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடுகள், செல்வோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு 10 பில்லியன் ரூபா கடன் உதவி பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சொந்தமான வீடுகளை நிர்மாணித்து கொள்வதற்கும், தனது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும், தேவை பூர்த்தி செய்வதற்கும், இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடிச் செல்வது அதிகரித்துள்ளது.

அதேவேளை, எதிர்பார்ப்புக்களை போன்று தேவைகள் நிறைவு செய்யப்படுவதில்லை, எனவே அவர்களின் எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள தனியாக கடன் உதவிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் திட்டத்தினூடாக 10 பில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாவும், மேலும் வெளிநாட்டுத் தொழிலாளர் தொழில் பாதுகாப்பிலும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: