தமிழ்லீடர்

வெள்ளப்பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சிட்னித் தமிழர்கள் உதவி!

கிளிநொச்சி மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 97 குடும்பங்களைச் சேர்ந்த பாலுட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பவதிகளுக்கு அத்தியவாசியமாகத் தேவைப்படுகின்ற பதின்மூன்று பொருட்கள் அடங்கிய பொதிகள் ஏற்றம் அறக்கட்டளையால் 27-12-2018 அன்று வழங்கப்பட்டது.

சிட்னித் தமிழர்களின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இவ் உதவித் திட்டம் கிளிநொச்சி மாவட்ட ஏற்றம் பணிப்பாளர் மற்றும் முகாமையாளரின் மேற்பார்வையில் தொண்டர்களின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டது.

இவ் உதவித் திட்டங்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் ஏற்றம் அறக்கட்டளையின் கிளிநொச்சி மாவட்டப் பணிப்பாளர் மற்றும் பாதிக்கப்பட்ட  பகுதிகளின் கிராம சேவையாளர்கள் கையளித்தனர்.

Add comment

Recent Posts

%d bloggers like this: