தமிழ்லீடர்

ஹட்டன் பிரதான வீதியில் 50அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்துள்ளது.

ஹட்டன் பொகவந்தலா பிரதான வீதியின் கிளங்கன் பகுதியில் லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து பொகவந்தலாவிற்கு கோழி ஏற்றிச்சென்ற லொறியே நேற்றிரவு 10 மணியளவில் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் சாரதி உட்பட இருவர் பயணித்த போதிலும் சாரதி படுகாயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிக வேகமே விபத்துக்கான காரணமென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: