தமிழ்லீடர்

ஹெலியில் பயணித்தார் பிரதமர்.

வடக்கில் ஹொலியில் பயணித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக சென்றுள்ளார்.

அவருடன்  அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, தயா கமகே ஆகியோரும் அனர்த்தத்தைப் பார்வையிடச் சென்றுள்ளார்கள்.

வடக்குக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர், ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அத்துடன் அஸ்கிரிய மல்வத்து மாநாயக்கர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஸ்ரீ தலதாமாளிகைக்கு விஜயம் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கதாகும்.

அவர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே விஜயம் செய்துள்ளார், என குறிப்பிடப்பட்டுள்ளது.                       

 

Add comment

Recent Posts

%d bloggers like this: