தமிழ்லீடர்

ஹோமியோபதி வைத்தியசாலை திறப்பு;

சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் மட்டக்களப்பு நகரில் ஹோமியோபதி வைத்தியசாலை ஒன்று நேற்று  திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரணவணபவன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  வைத்தியசலையைத் திறந்து வைத்துள்ளார்.

கௌரவ அதிதியாக பிரதி முதல்வர் க.சத்தியசீலன், சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மா.தயாபரனும், அத்துடன், மாநகரை ஆணையாளர் கா.சித்திரவேல்,

மற்றும் பிரதி ஆணையாளர் ந.தனஞ்சயன், பாலமுனை ஹோமியொபதி வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் பி.பிரவீனா, மாநகர சபைக்கணக்காளர் திருமதி ஜீ.ஹெலன் சிவராஜா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி ரோகினி விக்கேஸவரன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு பிரதான பஸ்த் தரிப்பிடத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இவ் ஹோமியோபதி வைத்தியசாலையில் இலவசமாக மருத்துவ வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், வைத்திய ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் வைத்தியசாலை பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.முனீர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஹோமியோபதி அரச வைத்தியசாலை இலங்கையில் அமைத்துள்ள 8ஆவது வைத்தியசாலை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோமியோபதி வைத்தியசாலைகள் வெலிசறையில் முதன் முதலாக அமைக்கப்பட்டது. அதனையடுதது தெகிவளை, மாத்தளை, வரக்கதாபொல, பாலமுனை, இங்கிரிய, குருநாகல் ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.         

 

 

Add comment

Recent Posts

%d bloggers like this: