11 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 18 வயதுடைய இளைஞர் மல்லாவிப் பொலிஸாரால் கைது.

மாந்தை கிழக்கு பிரதேச பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் என்ற இடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 11 வயது சிறுமியை அழைத்துச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மல்லாவிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

“வீதியில் சென்ற மாணவியை குளம் காண்பிப்பதாகத் தெரிவித்த இளைஞன், அருகிலுள்ள குளத்துக்கு அழைத்துச் சென்று அங்கு மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார்.வீடு திரும்பிய சிறுமி பெற்றோரிடம் சம்பவத்தைத் தெரிவித்துள்ளார். 

மேற்படி அவர்கள் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினர்.சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் 18 வயது இளைஞன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.அத்துடன், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் சிறுமி, மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்” என்று மல்லாவிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இதேவேளை, சந்தேகநபர் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: