தமிழ்லீடர்

13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்! வட மாகாண ஆளுனர் சுரேஸ் ராகவன்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை உள்ளடக்கிய 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 13ம்திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென வட மாகாண ஆளுனர் சுரேஸ் ராகவன் கோரியுள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த திருத்தச் சட்டத்திற்கு உரிய அதிகாரங்கள் அமுல்படுத்தப்படாமை அரசியல் அமைப்பிற்கு முரணானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் சனல் 4 ஊடகம் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் காணொளிகளை வெளியிட்டதாகவும் இது குறித்து சாட்சியமளிப்பதற்கு அரச நிறுவனங்கள் முன்வர வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தாம் கொண்டுள்ளதாகவும் இதற்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைமை ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கில் பௌத்த மத மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.எனினும் இந்த விவகாரம் குறித்து மாநாயக்க தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக வடக்கு மாகாண ஆளுனர் சுரேஸ் ராகவன் குறிப்பிட்டுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: