தமிழ்லீடர்

14 வயதான சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி மரணம்.

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி நேற்றிரவு (18)ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை பகுதியை சேர்ந்த இராஜேஸ்வரன் ரோஜினி என பொலிஸார் கூறுகின்றனர்.

அவரின் தாய் இரண்டாவது திருமணம் செய்த காரணத்தால்தான், தாயுடன் வளர்ந்து வந்த நிலையில் மனவுளைச்சல் காரணமாக நேற்று இரவு வீட்டுக்குள் தூக்கில் தொங்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

தாய் இரண்டாவது திருமணத்தின் பின்னர் தன்னை குறைவாக பார்ப்பதினால் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: