தமிழ்லீடர்

14 வயது சிறுமியை பாலியல் உறவிற்கு உட்படுத்திய இளைஞர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தை வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்று சென்றுள்ள நிலையில் சிறுமி தரம் 10 ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக பாடசாலை செல்லாது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அத்துடன் சிறுமிக்கு குறித்த இளைஞன் கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அவருடன் உரையாடி வந்துள்ளதுடன் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையிலேயே சிறுமியின் தயாரினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து 19 வயதான குறித்த இளைஞன் நேற்று(வியாழற்கிழமை) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியினை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: