தமிழ்லீடர்

16 வயது பாடசாலை மாணவியொருவர் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் மொனராகலை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியொருவர் தனது வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மொனராகலை , மெதகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார்.

மேற்படி இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , சில மாதங்களுக்கு முன்னர் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த இளைஞரொருவருடன் குறித்த மாணவி காதல் தொடர்பினை பேணி வந்துள்ளார்.

மேலும் இந்நிலையில் குறித்த இளைஞரால் மாணவி பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு , நேற்று (25) பிபில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோர் கூடிய கவனம் செலுத்துமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: