19ம் திருத்தச்சட்டத்தில் நடைமுறை ரீதியான குறைபாடு இருந்தால் அதை திருத்த தயாராகவுள்ளேன்

இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில், ஏதேனும் நடைமுறைக்கு உட்பட்ட குறைபாடுகள் காணப்படுமாயின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களை மற்றும் திருத்தங்களை நாடாளுமன்ற நடைமுறைகளுக்கமைய மேற்கொள்ளத் உடன்படுகிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகஅறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தனது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக இலங்கை அரசியலமைப்பின்19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அந்த திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளை எமது சமூகம் பெற்றுக்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அவை எமது நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் பெற்றுக்கொண்ட உண்மையான வெற்றியாக அமையும் அதேவேளை, தாய் நாட்டின் நவீன யுகத்தை நோக்கிய பயணத்துக்கு இன்றியமையாததாகும்.

எனவே, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை சார்ந்த குறைபாடுகள் காணப்படுமாயின் இலங்கை அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து மற்றும் பலப்படுத்தி,அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை நாடாளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள தான் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: