தமிழ்லீடர்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்படவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது!!!

நாடாளுமன்றில் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய மார்ச் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தொகுதி தீவிர சோதனைக்குட்படுத்தப்படும்.இதன்போது அமைச்சர்கள் ,எம்.பி.க்களின் அறைகள், அலுமாரிகள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதால் இதற்குரிய ஒத்துழைப்புக்களை அவர்கள் வழங்க வேண்டும் எனவும் அதேவேளை,வரவு,செலவுத்திடட்டும் சமர்ப்பிக்கப்படும் மார்ச் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு பொதுமக்கள் வருகை தர அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு வேளையிலேயே இதனைக்கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பார்வையாளர் கலரி அன்றைய தினம் விசேட அழைப்பாளர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும். ஏனெனில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் அன்றைய தினம் எம்.பி.க்களுடன் வரும் விருந்தினர்கள் நாடாளுமன்ற சுற்றுவட்டப்பகுதியான ஜெயந்திபுரவிலிருந்து தனி வாகனத்திலேயே அழைத்து வரப்படுவார்கள். எம்.பிக்களின் வாகனங்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: