தமிழ்லீடர்

292 நாள்களில், நாட்டை மாற்றுக்கூடிய முடிவொன்று வரும்!

நாட்டைப் பற்றியும் அதன் எதிர்காலச் சந்ததியினரைப் பற்றியும், எண்ணிச் செயலாற்றும் தலைவரே, இந்த நாட்டுக்குத் தேவையென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, குறிப்பிட்டார்.

இன்று இந்த நாட்டின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய தலைவரொருவர் அவசியமெனவும், இன்னும் 292 நாள்களில், நாட்டை மாற்றக்கூடிய முடிவொன்றை எடுக்கக்கூடியதாக இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்ததாகவும், இந்த நாட்டுக்கு, அரசியல் கட்சியொன்று அவசியமில்லை எனவும், ஒவ்வொரு வர்ணங்களைக் கொண்ட கொடிகளுக்கின்றி, தேசிய கொடிக்கே பிரச்சினை ஏற்பட்டுள்ளதெனவும்,  சுட்டிக்காட்டியுள்ளார்.                         

Add comment

Recent Posts

%d bloggers like this: