தமிழ்லீடர்

3,800 மில்லியன் அமெரிக்க டொலரில் எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை திட்டம்

3,800 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை திட்டம் குறித்து ஓமான் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதில் ஓமானுக்கு 30 வீதமே ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த கருத்துக்கு பதில் அளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர், ஓமான் அரசின் அறிக்கையை நானும் பார்த்தேன். இதில் ஓமான் பிரதான பங்காளரல்ல. இந்த அறிக்கை தொடர்பில் முதலீட்டுசபை விரிவான அறிக்கை வெளியிடும். நாம் இந்த கைத்தொழிற்சாலையை ஆரம்பிப்போம் என்றார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த காஞ்சன விஜேசேகர எம்.பி, நாம் முதலீடுகள் வருவதை எதிர்க்கவில்லை.

அமைச்சர் ஹர்ச டி சில்வா,

இது தொடர்பில் முதலீட்டு சபை தலைவரிடம் வினவினேன். முழுமையான அறிக்கையொன்றை வெளியிடுவதாக அவர் கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: