தமிழ்லீடர்

7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஏஷ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஏஷ் போதைப் பொருள்களுடன் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் தொடர்ந்து,
சந்தேக நபரிடம் இருந்து 8.670 கிலோ கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் பரவியுள்ள போதைப் பொருளை ஒழிக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அண்மை காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி தேடுதல் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் ஹெரோயின், கஞ்சா, கொக்கேய்ன் உட்பட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்ற நிலையில், போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: