தமிழ்லீடர்

82 வயது வயோதிபரைக்கூட பின்தொடரும் மர்மகொலைகள்!

மன்னார் – சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (82 வயது) என தெரியவருகிறது.

எனினும் குறித்த வயோதிபர் நேற்று இரவு வீட்டில் இருந்து சென்ற நிலையிலே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: