தமிழ்லீடர்

9475 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

இன்றைய கணக்கெடுப்பின் படி  கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால்  பாதிக்கப்பட்ட 3338 குடும்பங்களை சேர்ந்த  31234 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க்பபட்டுள்ளார்கள் என  புள்ளி விபரம் குறிப்பிடுகின்றது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 1021 குடும்பங்களை சேர்ந்த 3589 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இவர்கள் 10 பாதுகாப்பான இடங்களில்  419 குடும்பங்களை சேர்ந்த 1523 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் புள்ளி விபரம் குறிப்பிடுகின்றது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவு 7386 குடும்பங்களை சேர்ந்த 24032 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இவர்கள் 11 பாதுகாப்பான இடங்களில் 821 குடும்பங்களை சேர்ந்த 2556 பேர் தங்கவைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவு 1068 குடும்பங்களை சேர்ந்த 3613 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இவர்கள் 5 பாதுகாப்பான இடங்களில் 154 குடும்பங்களை சேர்ந்த 570 பேர் தங்கவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை குறித்த சீரற்ற காலநிலையால் நான்கு  வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டதாகவும், 148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் புள்ளி விபரங்களில் குறிப்பிடப்படுகின்றது.

Add comment

Recent Posts

%d bloggers like this: