சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட சவப்பெட்டியில் மாணவியின் சடலம் இல்லை!

 

rapeடெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வந்த சவப்பெட்டியில் டெல்லியில் இறந்த மாணவியின் உடல் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயது பிஸியோதெரபி மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட மாணவி முதலில் டெல்லியில் உள்ள சப்தர் ஜங் மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஒரு மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் பஸ் சாரதியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். டெல்லி விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. நேற்றைய விசாரணையின்போது ஏர் இந்தியா அதிகாரி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது குற்றவாளிகளான முகேஷ், அக்ஷய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏர் இந்தியா அதிகாரியை குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது வழக்கறிஞர், சிங்கப்பூரில் இருந்து வந்த சவப்பெட்டியில் மாணவியின் உடல் இல்லை, ஏதோ பொருட்கள் இருந்தன என்றார்.

இதை அதிகாரி மறுத்தார். அவர் கூறுகையில், ஆவணங்களின்படி சவப்பெட்டியில் மாணவியின் உடல் தான் இருந்தது. சவப்பெட்டியின் மொத்த எடை 140 கிலோ ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு வழக்கறிஞர், சவப் பெட்டியில் உடல் தான் இருந்தது என்பது ஸ்கேன் செய்யப்பட்டதா என்று கேட்டதற்கு அந்த அதிகாரி அத்தகைய ஸ்கேன் கருவி அங்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

Comments

comments

 
 
 
 

கருத்திடுக

You must be logged in to post a comment.

 
 

FOLLOW US ON TWITTER

 
 

விளம்பரம்

 
 

பக்கங்கள்

 
 

அக்கம் பக்கம்

 
 

காளமேகம்

 
 

கவித்தோட்டம்

 
 

பூராயம்

 
 

விளம்பரம்

 
 

விளம்பரம்

 
 

விளம்பரம்

.com domain + free privacy protection+etc= 10.55$ only...

.
 
 

கடந்தகாலப்பதிவுகள்

 
 
January 2015
M T W T F S S
« Dec    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031