Author Archives: Kajan

புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மத வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக அவர் கடமைகளை இன்று பொற்றுப்பேற்றார். புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை தொடக்கிவைத்தார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் விமர்சனங்களை தோற்றுவிக்கும் வகையில், முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போதிலும், முன்னாள் எதிர்க்கட்சி ...

Read More »

கொழும்பு மேல் நீதிமன்றம் கொக்கைன் கடத்தியவருக்கு மரண தண்டனை தீர்ப்பு.

கொக்கைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தொடர்பில்  இனங்காணப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொஹூவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒருவருக்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 62 கிராம் 620 மில்லிகிராம் நிறையுடைய கொக்கைன் போதைப்பொருளை கடத்தியமையால் அவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக  இனங்காணப்பட்டுள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க நேற்று அறிவித்து, தீர்ப்பு வழங்கியுள்ளார். 2012 ஆம் ...

Read More »

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிப்பு.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (17) பிற்பகல் கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில், கொழும்பு மேலதிக நீதவான் சனோஜா லக்மாலியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குமாறும் நீதவான் தெரிவித்துள்ளார். அவர், மருதானை பிரதேசத்தில் வைத்து நேற்று (17) கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பிலான நபருடன் அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், தகவலை ...

Read More »

சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் பதவி சந்ரர்த்ன பல்லேகமவிற்கு.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் ( நிலையான அபிவிருத்தி) சந்ரரத்ன பல்லேகம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமனம். 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த சந்ரரத்ன பல்லேகம சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராகவும், கடமையாற்றியுள்ளார். அத்துடன் 2013- 2015ஆம் ஆண்டு வரை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாகவும், கடமையாற்றியுள்ளார். சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய ...

Read More »

லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன்  சந்தேகிக்கப்படும் நபர் ஜெர்மன் அதிகாரிகளால் கைது!

2004 ஆம் ஆண்டில் இலங்கையின் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரை  ஜெர்மன் அதிகாரிகள் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். நவநீதன் எனும் 39 வயதுடையவரே கைது செய்துள்ளதாகவும், தென்மேற்கு ஜெர்மனியில் அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கையை நடத்தியதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலைக்கு காரணமான குழுவில் இவர் அங்கம் வகித்ததாகவும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கொலை முயற்சியிலும் ...

Read More »

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டங்களுக்கு ஜனாதிபதி உடன்படிக்கையில் கைச்சாத்து.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஆகியோர், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 கடன் திட்டங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸூக்கு 4 நாள் அரச விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மணிலா நகரில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார். இதன்போது, இந்த விசேட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அந்த நாட்டு ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்றதும் ...

Read More »

வடக்கு பாதுகாப்புப் படையினர் வசமுள்ள 1,201 ஏக்கர் காணிகள் கையளிக்க நடவடிக்கை.

வடக்கில் பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டுள்ள 1,201 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை, உரிமையாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றினூடாக இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிகழ்வொன்றில், இந்தக் காணிகள் கையளிக்கவிருப்பதாக, தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் காணியும், யாழ்ப்பாணத்தில் 46 ஏக்கர் காணியும், வன்னியில் 63 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவிருப்பதாக, இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read More »

நாட்டுக்குள் ‘போதைப் பொருள்’ பாவனை அதிகரிப்பு;

போதைப் பொருள் பாவனை நாட்டுக்குள் அதிகரித்துள்ளதாக, ​பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக நாட்டில் இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் போதைப்பொருள் பாவனையே காரணமெனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்தாண்டு மாத்திரம் 737 கிலோகிராம் ஹெரோய்ன், 40,000 கிலோகிராம் கஞ்சா, 1000 கிலோகிராம் கொக்கெய்ன், ஹசீஸ் எனப்படும் போதைப்பொருள் 13 கிலோகிராம் இவ்வாறு  கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.            ...

Read More »

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தீ விபத்து!

அனுராதபுரம் – கல்குளம் சந்திக்கருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலே தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கொள்கலன் வாகனத்திலிருந்து எரிபொருளை குறித்த நிலையத்துக்கு நிரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. தீயணைப்புக்கு பொலிஸ், மற்றும் பிரதேசவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து  செயற்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Read More »

இலங்கை ஜனாதிபதிக்கும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கும், இடையே சந்திப்பு.

பிலிப்பைன்ஸிற்கு 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டேவை இன்று (16) சந்திக்கவுள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பிற்கிணங்க, இந்த விஜயத்தை ஜனாதிபதி நேற்று இரவு மேற்கொண்டு, பிலிப்பைன்ஸை சென்றடைந்துள்ளார். மணிலா நகரில் அமைந்துள்ள நினோ அக்குயுனா விமான நிலையத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை பிலிப்பைன்ஸின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சரால் வரவேற்கப்பட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மற்றும் பொருளாதாரத்தை  வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இரு ...

Read More »