Author Archives: Kajan

கொழும்பு துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நேற்றுடன் நிறைவு.

கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்கு கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கை நேற்றுடன் முடிவடைந்தது. கொழும்பு துறைமுக நகரம் 269 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்படவிருந்ததாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன் அடுத்தகட்டமாக கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக,மேலும் குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் துறைமுக நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகள் ...

Read More »

10,000 வீட்டுத்திட்டம்; முதலில் 4,750 வீடுகள் நிர்மாணிக்க தீர்மானம்.

வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்மைப்புத் திட்டத்தில், 4,750 வீடுகள் முதல் கட்டமாக, நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, அவர் நேற்று (15) ஊடகங்களுக்கு வழங்கிய தகவலிலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலில், வீடுகள் 550 சதுரஅடி பரப்பளவில் அமையவிருப்பதாகவும், இவற்றுக்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கப்படவிருப்பதாகவும், தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1,500 வீடுகளும், கிளிநொச்சியில் ...

Read More »

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு; சந்திரிக்கா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் தன்னை சந்தித்து நாட்டைப் போலவே கட்சிக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சினைகளால் தாம் கைவிடப்பட்டதாக தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்  ​பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி மற்றும் குழுவினருடன் ஸ்ரீ.ல.சு கட்சி  இணைவதை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தன்னை வந்து சந்தித்த உறுப்பினரிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை விட்டு வேறெந்த கட்சியுடனும் இணையாமல், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பலப்படுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ...

Read More »

நாச்சிமார் கோவிலடியில் இளைஞர்கள் மீது வாள் வெட்டுத்தாக்குதல்.

கோவிலுக்கு பூஜை வழிபாடுட்டில் ஈடுபட வந்த இளைஞர்கள் மீது, வாள் வெட்டு குழு தாக்குதல் சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில், நேற்று (15) காலை நடைபெற்றுள்ளது. தைப்பொங்கல் தினமான நேற்றைய தினம் நாச்சிமார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், கோவிலுக்கு அருகில் இளைஞர்கள் கூடி நின்ற போது, அப்பகுதிக்கு வந்த வாள் வெட்டுக்குழுவினர், இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த தாக்குதலில், இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.    ...

Read More »

குளமொன்றில் நீரில் மூழ்கி இருவர் உயிரெழப்பு;

வவுனியா – இரட்டை பெரியகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள குளமொன்றில் நீரில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர், என குறிப்பிடப்பட்டுள்ளது. 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. மேலதிகமான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.                                 

Read More »

பல தடவை சிறு குழந்தைக்கு சூடு வைத்த நபர் கைது!

1 வயதும் 10 மாதங்களு​மான குழந்தையொன்றை பல மாதங்களாக சிகரட்டால் சூடு வைத்த சந்தேகநபரொருவரை, சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளார்கள். சியம்பலாண்டுவ, 5 ஆம் இலக்க பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேகநபரை, கைது செய்ய முயற்சித்தபோது, குறித்த நபர் தப்பிச் சென்று தலைமைறைவாகியிருந்தார், இவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் சில உபாயங்களை பயன்படுத்தியிருந்தனர். பின்னர் பெண் பொலிஸ் அதிகாரியொருவரை குறித்த நபருடன் காதலராக சில நாள்கள் தொலைபேசியில்  உரையாட வைத்து, பின்னர் தன்னை நேரில் சந்திக்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டு, குறித்த நபரை தெபகவெல பிரதேசத்துக்கு ...

Read More »

பொலிஸார் மூவரை விபத்துக்குள்ளாக்கிய லொரி சாரதி தப்பிச்சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – கச்சாய் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற லொரியொன்றை, பொலிஸார் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது, குறித்த லொரியின் சாரதி பொலிஸ் அதிகாரிகள் மூவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவமொன்று நேற்று  இரவு நடைபெற்றுள்ளது. சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார், அங்கு மணல் ஏற்றப்பட்டு புறப்பட தயார் நிலையில் இருந்த லொரியை தடுத்து நிறுத்த முற்பட்ட போதே, லொரியின் சாரதி பொலிஸார் மூவரையும் விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் ...

Read More »

தடை செய்யப்பட்ட மீனினங்கள், உலர் கடற்குதிரைகளுடன் இருவர் கைது!

இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்ட, பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட மீனினங்கள், உலர் கடற்குதிரைகள் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று  பொலிஸாரால் கற்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, உலர் கடற்குதிரைகள் 130 கிலோகிராமும், பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட மீனினங்கள் 500 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 31 மற்றும் 46 வயதுடையவர்கள், கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.     

Read More »

எம்.பி. நாமல் ராஜபக்‌ஷ தமிழ் அரசியல் கைதியின் குடும்பத்துக்கு உதவி.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரான தமிழ் அரசியல் கைதி ஒருவரின் குடும்பத்துக்கு வீடொன்றை அமைத்துக்கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ முன்வந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக வடக்குக்கு விஜயம் செய்த நாமல் நேற்றைய தினம் கிளிநொச்சியில் குறித்த கைதியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Read More »

இந்த நாட்டை நாசம் செய்தவர்கள் யார்?

பிரதமராகக் கடமையாற்றிய ஐம்பது நாட்களில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, இந்த நாட்டை நாசம் செய்தாரா? இல்லை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நாட்டை நாசம் செய்தாரா? என்பதை குறித்து, நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த வேண்டுமெனக் கோரிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி பந்துல குணவர்தன, அரசாங்கத்தில் நடத்தப்படும் போலிப் பிரசாரங்களால், சர்வதேசக் கடனுதவிகள் ​தடைப்படும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பு – புஞ்சி பொரளையில் உள்ள, வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில், நேற்று முன்தினம் ந​டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read More »