Author Archives: Kajan

வத்தளையிலிருந்து பயணித்த காருக்கு துப்பாக்கி சூடு இருவர் பலி!

நேற்று பகல் வத்தளை- ஹேக்கித்த பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. காரில் வத்தளையிலிருந்து நீர்கொழும்புக்கு, சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றுமொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரில் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டதுடன்,  மற்றைய நபர் மதி ​என்று  அழைக்கபடுபவரெனவும், குறித்த இருவருடனும் பயணித்த ஸ்டீவன் ...

Read More »

போதைப் பொருள், புகையிலை பயன்பாட்டால் வருடத்துக்கு 80ஆயிரம் பேர் உயிரிழப்பு.

போதைப் பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டால் 80 ஆயிரம் பேர் வரை வருடமொன்றுக்கு உயிரிழப்பதாக, போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியும் வைத்திய அதிகாரியுமான, சமந்த குமார கிதல ஆராச்சி குறிப்பிட்டுள்ளார். தற்போது பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில், போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையில், “தேசிய போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம்” நடைமுறையில் பயன்படுத்தவுள்ளதாகவும், மேலும் தெரிவித்துள்ளார்.                ​

Read More »

ஆளுநர் பிரதமரின் புகைப்படத்தை அலுவலகத்தில் வைக்க உத்தரவு.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்தை உடனடியாக தொங்க விடுமாறு, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்ற மைத்திரி குணரத்ன உத்தரவிடப்பட்டுள்ளனர். தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆளுநரின் அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஆளுநரின் புகைப்படங்கள் உள்ள நிலையில், பிரதமரின் புகைப்படம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.             

Read More »

வொஷிங்டனுக்கு விஜயம் மங்கள சமரவீர.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்குரிய நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வொஷிங்டனுக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது, நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து  இது சம்பந்தமானதொரு பேச்சுவார்த்தையும் நடத்த தீர்மானித்துள்ளார். இந்த விஜயத்தில், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.              ...

Read More »

திங்கட்கிழமை முதல் புதிய பஸ் கட்டணங்களை அறவிடாத பஸ்கள் சுற்றிவளைப்பு.

புதிய கட்டணங்களுக்கமைய பஸ் கட்டணங்களை அறவிடாத பஸ்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள், நாளை முதல் முன்னெடுக்கவிருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டணங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு திங்கட்கிழமை முதல் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கவிருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையால், தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்துக்குட்பட்ட 475 மார்க்கங்களில் சுமார் 5,500 பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன. பஸ்களில் பயணிகள் கஷ்டத்துக்குள்ளாகும், பட்சத்தில், அறிவிப்பதற்கு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் ...

Read More »

ஆட்சியைக் கைப்பற்றுவதாக ஆட்சி அமைப்பது உறுதி நாமல்;

அரசாங்கம், காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்தினால், பெரும்பான்மை பலத்துடன், ஆட்சி அமைப்பது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை, அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் மக்களுக்காக சேவையாற்றுவதிலும் பார்க்க, பதவியாசைக் கொண்ட அரசாங்கமே, தற்போது ஆட்சியில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள், எதிர்கட்சியிலே நம்பிக்கைக் கொண்டுள்ளது எனவும் , நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு, ஒரு​போதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.             

Read More »

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு வந்து சந்திக்குமாறு, அழைப்பு விடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி மேற்கொண்டதாகக் கூறப்படும் நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம்  விசாரணை செய்யும் முகமாகவே, பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.                        ...

Read More »

போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடணம்.

மாணவர்களின் மூலம் போதைப்பொருள் ஒழிப்பை  கற்றுக்கொள்வோம்’  என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களையும், பெற்றோர்களையும் இணைத்துக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசதத்தின் வழிகாட்டலின் கீழ், கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 21 முதல் 25 ஆம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி செயலகம் உட்பட அரச நிறுவனங்களும், இணைந்து  வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், இது தொடர்பாக கல்வி துறை சார்ந்த அதிகாரிகள், அதிபர்களை தெளிவு படுத்துவதற்கு, அனைத்து ஆலோசனைகளையும் கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ளதென, கல்வி அமைச்சர் அகில விராஜ் ...

Read More »

கடலில் நீராடிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு -புன்னக்குடா கடலில் நீராடிய மாணவன் அலையில் அள்ளுண்டுச் சென்று சடலமாக நேற்றுக் காலை மீட்கப்பட்டதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். செங்கலடி குமாரவேரலியார் கிராமத்தைச் சேர்ந்த, 14 வயதுடைய மாணவனே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம்  காட்டப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் மாலை, ஐந்து மாணவர்கள் புன்னக்குடா கடலில் நீராடுவதற்குச் சென்றபோது, குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஏனைய மாணவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.  ...

Read More »

எனது முழு ஒத்துழைப்பும் தங்களுக்கே!

கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்  அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் நேற்று கொழும்பில் சந்தித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக செயற்படுவதற்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, தெரிவித்த அவர் கிழக்கு மக்களின் பிரச்சனைகளையும், தீர்த்துவைக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களை தாங்கி இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்விதமான அநியாயம்ந் , கடந்த காலங்களில் நியமனங்கள்,பாடசாலை போன்ற விடயத்தில் அநியாயங்கள் மாகாண நிருவாகத்தில் நடைபெற்றிருக்கின்றது. தமிழ் மக்கள் யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த ...

Read More »