Author Archives: Kajan

பொதிகளை வழங்கிய நபர் கைது.

அவுஸ்திரேலியா – மெல்பன் மற்றும் கென்பரா ஆகிய நகரங்களில் உள்ள தூதரக காரியாலயங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் பொதிகளை வழங்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். பிரித்தானியா, அமெரிக்கா, சுவிசர்லாந்து, பாகிஸ்தான், இந்தியா, கிரீஸ், தென்கொரியா, நியூசிலாந்து, இத்தாலி, ஸ்பானியா ஆகிய நாடுகளில் உள்ள தூதரக காரியாலயங்களில் இப்பொதிகள் நேற்று முந்தினம் கிடைக்கப்பெற்றுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அவுஸ்திரேலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த நாடுகளில் உள்ள தூதரகங்களில் இதுவரை 38 ​பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறித்த பொதிகளை வழங்கிய சந்தேகநபர் 48 வயதுடையவர், ...

Read More »

பொதுமன்னிப்பு ஞானசார தேரருக்கு;

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை,  பெப்ரவரி 4 ஆம் திகதி, சுதந்திர தினம் வருவதால் அவரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, பெவதிஹட அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது. நாட்டில் அவர் இனம், மதம் தொடர்பில் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்குமாறு குறித்த அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டுக்கு பாதகமாக கருத்தை ...

Read More »

கட்சிக்காக உழைப்பேன் தயாசிறி!

24 மணி நேரமும் கட்சிக்காக உழைப்பதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று அவர் பதவியேற்ற போது  தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தமது கட்சி உறுப்பினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி கட்சியை பலப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் கிராமங்கள் தோறும் சென்று கட்சி ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.                               

Read More »

எனது முழு ஒத்துழைப்பும் தங்களுக்கே!

கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் நேற்று கொழும்பில் சந்தித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக செயற்படுவதற்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, தெரிவித்த அவர் கிழக்கு மக்களின் பிரச்சனைகளையும், தீர்த்துவைக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களை தாங்கி இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்விதமான அநியாயமும் நடந்துவிடக்கூடாது , கடந்த காலங்களில் நியமனங்கள்,பாடசாலை போன்ற விடயத்தில் அநியாயங்கள் மாகாண நிருவாகத்தில் நடைபெற்றிருக்கின்றது. தமிழ் மக்கள் யுத்தத்தில் மிக மோசமாக ...

Read More »

உடல் உறுப்புக்களை பொருத்துவதற்கான செயற்திட்டம்.

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம்  நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும், இலங்கை விமானப் படையினருக்குமிடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க ...

Read More »

பெரும் அபாயத்தை எதிர்கொள்ளும் மக்கள்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான நிலப்பரப்பில் பாரியளவிலான கருங்கல் முறையாக அகற்றப்படாமையால், அதற்கு அருகில் வசிக்கும் பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்கள். மத்திய சுற்றாடல் அதிகார சபையால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன், இப்பகுதியில் மண் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள  உரிமையாளர், அங்கு அபாய நிலையில் காணப்படும்  கருங்கல்லை அகற்றும் பணிகளில் ஈடுபடவில்லையெனவும், தெரிவித்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன்னர் அதே இடத்தில் கற்குவாரியொன்று நடாத்தி வந்துள்ளதாகவும், அதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்ட நிலையில், பிரதேச மக்கள் ஒன்றிணைந்து முறைப்பாடு பதிவு ...

Read More »

கடற்படையினரால் கஞ்சாப்பொதிகள் மீட்பு!

மன்னார் வங்காலை கடற்பகுதியில் 184 கிலோ 200 கிராம் நிறையுடைய சுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் கைது செய்யப்பட்ட நபரையும் கடற்படையினர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். மேலதிக விசாரணைகளை வங்காலை பொலிஸார்  மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.                       

Read More »

நாளை அரசமைப்பு பேரவை கூடவுள்ளன.

நாட்டுக்கு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு நாளை      10.30 க்கு, அரசமைப்பு பேரவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெறவுள்ளது. செயற்குழுவில் சமர்பித்த நிபுணர் குழு அறிக்கை, அரசமைப்பு பேரவையில் நாளை முன்வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் சகல.  கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவிக்கவுள்ளதாகவும், அரசமைப்பு பேரவை 12.30 மணிவரை இடம்பெறுமெனவும், அத​ன் பின்னர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Read More »

ஆதரவாளர்கள் பயணித்த வேன் மோதியதில் தெருவில் மாடுகள் பலி!

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் தியாவட்டவான் பிரதேசத்தில் வேன் மோதியதில் தெருவில் நடமாடிய 5 மாடுகள் பலியாகியதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முந்தினம் மாலை ஓட்டமாவடி பாலத்தை அண்மித்த தியாவட்டவான் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. புதிய ஆளுநரின் பதவியேற்புக்காகச் சென்றிருந்த  ஆதரவாளர்கள் பயணித்த வேன் திருகோணமலையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது தெருவில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள் மீது மோதி 5 மாடுகள் பலியாகி விட்டது. வேனின் முன் பக்கம் சேதமாகியதுடன், விபத்தில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் ஒருவனுக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக ...

Read More »

மட்டக்களப்பு ஸ்டூடியோவுக்குள் புகுந்த பிக்கு;

மட்டக்களப்பிலுள்ள ஸ்டூடியோவுக்குள் நேற்று  காலை திடீரென உட்புகுந்த பிக்கு ஒருவர், உரத்துச் சத்தமிட்டு அட்டகாசம் செய்துள்ளார். ஸ்டூடியோவில் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த குழந்தையின் புகைப்படத்தைக் காட்டி, இது தனது சிறிய வயதுப் புகைப்படம் இதை நீங்கள் எவ்வாறு காட்சிப்படுத்த முடியுமென முரண்பட்ட அவர், அப்புகைப்படத்துக்கு விலை 125 ரூபாயா எனவும் கேள்வியெழுப்பி அட்டகாசம் செய்துள்ளார். மேலும், இது தொடர்பில் தான் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப் போவதாகவும் ஸ்டூடியோ ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளார், காவியுடை தரித்து வந்த நபர், உண்மையில் பிக்கு போன்று நடந்துகொள்வில்லையென, ...

Read More »