Author Archives: Kajan

பெண் ஒருவர் இரண்டுமாடி கட்டடத்திலிருந்து விழுந்து பலி!

குருநாகல் பஸ் தரிப்பிடத்தில் இருந்த இரண்டுமாடி கட்டடத்திலிருந்து விழுந்தே பெண் உயிரிழந்துள்ளார். இன்று காலை, இடம்பெற்ற சம்பவத்தில் குருநாகல் – தோரயாய பிரதேசத்தைச் சேர்ந்த, 32 வயதுடைய பெண்ணொருவரே​ உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சில நாட்களாக மனநல குறைப்பாட்டுடன் இருந்ததாக, அவரது உறவினர் தெரிவித்துள்ளன, இதுசம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.           

Read More »

ஜனாதிபதி மக்களுக்காக நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் செலவிடுகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த தலைவர் இவர் நாளாந்தம் மக்களுக்காக 16 மணத்தியாலங்கள் கடமையாற்றுகின்றார், ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன தெரிவித்தார். அத்துடன் அரசியலில் ஈடுபடுவதற்காகவே தான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியிலிருந்து விலகியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் ​தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், ஜனாதிபதி பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாததால், ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பிரத்தியேகச் செயலாளர் ...

Read More »

கல்லடி பாலத்தில் வீழ்ந்த சிறுமி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில்  பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் சடலம் நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அலுவலகத்திற்கு அருகில்  உள்ள ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (05) பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியைக் காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்தபோதும் குறித்த சிறுமியை காப்பாற்ற முடியாமல் போன சம்பவமும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். ...

Read More »

கைதாகிய இரு பொலிஸார் இடமாற்றம்!

திருகோணமலை சேருநுவர பகுதிலில் புதையல் தோண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு உதவி பொலிஸ் தலைமையக காரியாலயத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகளே  இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துளளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் சேருநுவர பகுதியில் புதையல் தோண்டுதலில் ஈடபட்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் தலைமையக காரியாலயத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளையும் உதவி பொலிஸ் தலைமையக காரியாலயத்தில் இருந்து உடனடியாக கரடியனாறு மற்றும் ஆயித்தியமலை பொலிஸ் ...

Read More »

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நடைபெறவிருப்பதாக அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித் தலைமையில் விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவிருப்பதால், இன்று அமைச்சரவை கூட்டத்தை நடத்தத் தீர்மானித்ததாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை நேற்று இரவு அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர்களின் விசேட கூட்டம் நடைபெற்றதாகவும், இதன்போது நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டிய தகவல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாவும், குறிப்பிடப்பட்டுள்ளது.    ...

Read More »

இராணுவத்தில் இருந்து தப்பிய நாமல் குமார;

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற தொடர்பில், நாமல் குமாரவிற்கு எதிராக இராணுவ விசாரணைகள் முன்னெடுத்து அவரைக் கைதுசெய்யவிருப்பதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளது. நாமல் குமார தொடர்பில் தற்போது குற்ற விசாரணைப் பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விசாரணைகள் நிறைவுற்றப் பின்னர் இராணுவ விசாரணைகள் தொடரும்  என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து  குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு எதிராக இராணுவத் தரப்பினரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாமல் குமாரவுக்கு எதிராகவும் எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.                    ...

Read More »

எதிர்ப்பால் மாத்தறை இருந்து திரும்பினார் அமைச்சர்!

மாத்தறையிலிருந்து பெலியத்த வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் இன்று முதன் முதலாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜீன் ரணதுங்க ரயிலில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போது எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. பெலியத்த ரயில் நிலையத்துக்கு சென்ற அமைச்சரிடம் இது மஹிந்த  ராஜபக்‌ஷவால் அமைக்கப்பட்ட ரயில் பாதை என மஹிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊடகங்களுக்கும் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கிருந்து சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கண்காணிப்பு ரயிலில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள், ...

Read More »

மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் நேற்று மாலை  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழப்பு, ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளத்து வளைவில் மோட்டர் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியுடனும், மோட்டார் சைக்கிளுடனும் மோதி பின்னர் வேலிக்கு நடப்பட்டிருந்த  கொங்கிறீட் தூண்களையும், உடைத்துக்கொண்டு சென்றது. இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியும், மோட்டர் சைக்கிளும் பலத்த சேதம் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து சம்பத்தில் உயிழந்தவர், மற்றும் காயமடைந்தவர், கிரான்குளத்தைச் ...

Read More »

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம்:

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களை விடுதலை செய்யுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, நீதி அமைச்சர் தலதா அத்துக்கோளரவிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கை தொடர்பில், எந்தவொரு பதிலையும் தெரிவிக்காது அமைச்சர் தலதா அத்துக்கோரள நழுவிச்சென்றார், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள நேற்று நேரில் சென்று ...

Read More »

இலங்கைப் பிரஜை கைது!

சட்டவிரோதமானமுறையில் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்ட சிகரட்டுகளுடன், இலங்கை பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை, விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய வர்த்தகரே சிகரட்டுடன் கைது செய்யப்பட்டார். குறித்த நபரின் பயணப் பொதியிலிருந்து, 16,50,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பிலான, 30,000 சிகரெட்டுகள் அடங்கிய 150 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளார்கள்.                ...

Read More »