Author Archives: Kajan

அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்; ரணில்!

அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணமான  அரசியல் சூழ்ச்சியின் விபரத்தையும் விரைவில் வெளியிடுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், ஒக்டோபர் (26) நடந்த சூழ்ச்சியின் பின்னணியில் மைத்திரி – மகிந்த மட்டும் தொடர்புபடவில்லை. அவர்களின் குடும்பமும் இந்த அரசியல் சூழ்ச்சியுடன் தொடர்புபட்டுள்ளார்கள். அத்துடன், மகிந்த அணியில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. அவர்களின் விபரங்களையும் விரைவில் வெளியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

Read More »

சிறுவனுக்கு சூடு வைத்த தாய் கைது!

ஆறு வயது சிறுவனுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில், சிறுவனின் தாயை, மாத்தளை பொலிஸார், இன்று (29) கைதுசெய்துள்ளார்கள். மாத்தளை உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி பெண்ணை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.                                 

Read More »

கஞ்சா கோப்பி விற்பனை பெண் கைது!

கஞ்சா கோப்பி விற்பனை செய்த பெண் ஒருவர் நேற்று  மாலை 06 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய போதை வஸ்துக்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரத்நாயக்கா உள்ளிட்ட குழுவினர் நிந்தவூர் பிரதேசத்தில் கஞ்சா கோப்பி விற்பனை செய்த வீடு ஒன்றை சுற்றி வளைத்த போதே போதை வஸ்துகளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோ கிராம் கஞ்சா கோப்பி மற்றும் பக்கட்டுக்கள், பண்ணப்பட்ட  2 ...

Read More »

பிரதமர் பெயர்ப்பலகை சேதம்!

நாவலப்பிட்டி நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர்ப்பலகையை, இனந்தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர், என்று நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில், நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதமரை வரவேற்கும் வகையில், நாவலப்பிட்டி நகர சபையின் அனுமதியுடன், நகரில் வைக்கப்பட்ட பெயர்ப்பலகை இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது. நகரசபை தலைவர் சசங்க சம்பத்சஞ்சே, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை  நகரிலுள்ள வியாபார நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீடிவி உதவியுடன், சந்தேகநபரை கைதுசெய்வதற்கு  நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.                  ...

Read More »

ஹெலியில் பயணித்தார் பிரதமர்.

வடக்கில் ஹொலியில் பயணித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக சென்றுள்ளார். அவருடன்  அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, தயா கமகே ஆகியோரும் அனர்த்தத்தைப் பார்வையிடச் சென்றுள்ளார்கள். வடக்குக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர், ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அத்துடன் அஸ்கிரிய மல்வத்து மாநாயக்கர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஸ்ரீ தலதாமாளிகைக்கு விஜயம் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கதாகும். ...

Read More »

மட்டக்களப்பில் 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் 8.5 ஏக்கர் காணிகள் இராணுத்தால் தேசிய நல்லிணக்க முறையில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரித வழிகாட்டலில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வந்த பொதுமக்களின் காணிகள் நேற்று (27) பிற்பகல் 4.00 மணியளவில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதியால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களிடம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் மாவட்ட ...

Read More »

துப்பாக்கிச் சூடு- பெண் கைது!

கிராண்ட்பாஸ்- ஹேனமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். குறித்த பெண் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்து வந்துள்ளாரெனும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான புளுமென்டல் சங்காவை கைதுசெய்வதற்கும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றுக்காலை 8 மணியளவில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் நால்வர் காயமடைந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மீண்டும் சபைக்குள் குழப்பம்:

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, இன்று கூடவுள்ளது. மேற்படி குழு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடத்த   சபாநாயகர் கருஜயசூரிய நியமித்துள்ளார். ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒளிநாடா காட்சிகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காக, நாடாளுமன்ற பணியாளர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறென, உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை அடுத்து சபையமர்வு நவம்பர் 14 ஆம் திகதி கூடியது. அன்றிலிருந்து 16 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக சபைக்குள் நடந்த வன்முறை சம்பவங்களும் கூறிப்பிடதக்க  ...

Read More »

‘பொலிஸாருக்கு எதிராக 50 முறைப்பாடுகள்’

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸுக்கு எதிராக, 50 முறைப்பாடுகள் தினந்தோறும் கிடைப்பதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும், இதுவரையிலான காலப்பகுதிக்குள் 600 முறைப்பாடுகள் அதிகமாக கிடைக்கப்பட்டுள்ளது எனவும் ஆணைக்குழுவின் தவிசாளர் ஜி.எச்.மனத்துங்க தெரிவித்துள்ளார்.

Read More »

சுனாமி பேரழிவுக்கு 14 ஆண்டுகள். 

தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்ப்படுகின்றது. 2004ஆம் ஆண்டு சுனாமி  பேரலை ஏற்பட்டு 14 வருடங்கள் முடிவடைந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும் மத அனுஷ்டானங்களும் நடைபெறுகின்றது. மத அனுஷ்டானங்களுக்கும், அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும், இன்றையதினம் முன்னுரிமை அளிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம்   தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி மாவட்டத்தில் பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்னால் காலை 9 மணிக்கு       நடைபெறவிருக்கிறது. இதில் பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ ...

Read More »