Author Archives: kalai

பெரும்பான்மை இழந்தது மகிந்த அரசாங்கம் !

ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது. பராளுமன்றத்தில் நிலவிய அமைதியின்மை காரணமாக பாராளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர் அறிவித்த சபாநய அறிவித்துள்ளார். இந்நிலையில், நாளை கூடும் ...

Read More »

சைக்கிள்-வீணை கூட்டு! விக்கியைப் பயன்படுத்த முயலும் கஜேந்திரகுமார்!

ஈ.பி.டி.பியின் ஆதரவை எதிர்பார்த்தே தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாநகரசபை முதல்வர் பதவிக்கு போட்டியிட்டதென கூறியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். முதலமைச்சரை பயன்படுத்து, எதிர்கால தலைமை தங்களிடம் மட்டுமே வர வேண்டுமென முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். வாரஇதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணலொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளாார். முதலமைச்சரின் அணியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இணையக்கூடாதென முன்னணி கூறி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது- “முதலமைச்சர் ஆரம்பிக்கக் கூடிய கூட்டு முன்னணியில் நாங்கள் வரலாம், சித்தார்த்தன் போன்றவர்கள் வரலாம். அல்லது முதலமைச்சர் சொன்னது ...

Read More »

விமர்சிப்பதைத் தவிர வேறுதிட்டம் ஒன்றுமில்லாத கஜேந்திரகுமார் – சித்தாத்தன்

கஜேந்திரகுமார் எம்மை பலரையும் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை இன்னும் மக்களுக்குச் சொல்லவில்லை. முதலில் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றுமே செய்யாமல், மற்றயவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதால் மட்டும், தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கலாம் என்றோ, தன்னுடைய அரசியலை முன்னெடுக்கலாமென்றோ அவர் நினைக்கக் கூடாது என புளொட் கட்சியின் தலைவர் சித்தாத்தன் அவர்கள் தனது வாசஸ்தலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது  தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளிற்கு இந்த ...

Read More »

”தமிழ்த் தேசியத்தின் காவலனே வருக” – கிளி.யில் விக்கிக்கு ஆதரவு

கிளிநொச்சி மாவட்டம் எங்கும் தமிழ் மக்கள் கூட்டணி கட்சித் தலைவர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிராக செயற்பட்டு தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுறுதியுடன் பயணித்ததற்காக கூட்டமைப்பின் தலைமையால் பல நெருக்கடிகளை அனுபவித்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார்.   இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டம் எங்கும் முன்னாள் முதலமைச்சரின் கட்சியை வரவேற்றுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  “தமிழ்த் தேசியத்தின் காவலனே! வருக! வருக!  ...

Read More »

கஜேந்திரனின் சகோதரர் விடுதலையானது எப்படி? – இரகசியம் சொல்லும் சுரேஸ்

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளிநாட்டிலிருந்து யார் மூலம் இலங்கை திரும்பி வந்தாரென்பதும், அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு யாருடைய உதவியுடன் அவர் உயிருடன் திரும்பி வந்தாரென்பதும், எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதும், இன்னும் பல விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.“ இவ்வாறு அதிர்ச்சி தகவலை அம்பலப்படுத்தியுள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஆயுதப் போராட்ட காலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த கஜேந்திரகுமாரோ, பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தில் மாத்திரம் அங்கம் வகித்த கஜேந்திரனோ, தங்களை மட்டும் தேசிய ...

Read More »

மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க கூட்டமைப்பு முடிவு (அறிக்கை)

மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு  தெரிவிப்பது மற்றும் மகிந்த முகாமுக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.   இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை வருமாறு:   கடந்த, ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்புகுழுக் கூட்டம் இம்மாதம் 2ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு ...

Read More »

மகிந்த அமைச்சரவையில் இணைகிறேனா? – சிவசக்தி ஆனந்தன் மறுப்பு

ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மகிந்த அமைச்சரவையில் இணையப் போவதாக  பகிரங்கமாகத்  தெரிவித்தார் என ஐபிசி தமிழ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மை இல்லை என்று சிவசக்தி ஆனந்தன் அவர்கள் சற்றுமுன் தமிழ்த் தேசிய வானொலிக்குத் தெரிவித்தார்.   இச் செய்தி தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் அவர்கள், ஐபிசி தமிழ் ஊடகத்தின் இச் செயலானது ஊடக அறத்துக்கு முரணானது என்றும் இது தொடர்பாக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.   இச் செய்தி தொடர்பான விரிவான அறிக்கை ...

Read More »

கட்சி நலனைப் புறந்தள்ளி கொள்கைக்காக ஒன்றுபடவேண்டும் – விக்கி

“கொள்கை ரீதியாக நாம் பயணிக்க விரும்பினால் எம் கட்சிகளின் நலவுரித்து பின் ஆசனத்திற்குப் போக வேண்டி வரும். கட்சி நலன்களையும் எமது முன்னைய பின்னணிகளையும் மற்றையவர்களின் முன்னைய பின்னணிகளையும் கணக்கில் எடுத்து பயணிக்கத் தொடங்கினோமானால் எமது ஒற்றுமை குலைந்து விடும். ஒரே கொள்கைகள் உடைய சில கட்சிகள் தமது கட்சி நலன்கள் சார்ந்து வேற்றுமைப்படப் பார்க்கின்றன. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. கட்சிகள் தமது கொள்கைகளில் திடமாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் என்று வந்தவுடன் ஒரே கொள்கைகளில் இருக்கும் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளில் ...

Read More »