Author Archives: லீலன்

வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு!!!

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இன்று வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.  மேற்படி பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு முன்பாக கொட்டப்பட்டிருந்த கிரவல் மண்ணில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் அவதானித்ததுடன் குறித்த சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் மோட்டார் குண்டினை அவதானித்துள்ளதுடன் விஷேட அதிரடிப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் நீதிமன்ற அனுமதியின் ...

Read More »

தண்டவாளத்தை விட்டு தடம்புரண்ட ரயில்!!!

சிறிலங்காவின் களுத்துறைப் பகுதியில் தொடருந்து ஒன்று தண்டவாளத்தைவிட்டு பாய்ந்து தடம்புரண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்படி இன்று காலை நடந்த இந்தச் சம்பவத்தால் தென்னிலங்கைக்கான கரையோர தொடருந்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. குறித்த தொடருந்து காலியிலிருந்து மருதானை நோக்கி வந்துகொண்டிருந்தபோது வளைவு ஒன்றில் வேகமாக திரும்பியதாகவும் இதனால் தண்டவாளைத்தைவிட்டு குறித்த தொடருந்து தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதன்போது குறித்த தொடருந்திலிருந்த பயணிகள் பாரிய விபத்து நேரப்போகின்றதோ எனும் அச்சத்தில் அலறியடித்ததாக பயணி ஒருவர் கூறியுள்ளார்.எவ்வாறாயினும் தொடருந்தில் பயணித்த எவருக்கும் ...

Read More »

பாதுகாப்புக்காக யாழ் நீதிமன்றில் தஞ்சமடைந்த வயோதிபர்!!!

இணுவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று தஞ்சமடைந்தார். மேற்படி அவரை சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட நீதிவான், தஞ்சமடைந்தவரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்ப்பித்து மருத்துவ சோதனைக்குட்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார். மேற்படி இணுவில் பகுதியைச் சேர்ந்த 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தனக்கு சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தன்னால் நடமாட முடியாது உள்ளதாகவும் தெரிவித்து யாழ்ப்பாணம் மூத்த ...

Read More »

யாழ் பல்கலைகழக மாணவர்கள் கொல்லப்பட்டதன் சாட்சி!!!

3 தடைவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது நள்ளிரவு வேளை. வீட்டுக்கு வெளியே செல்ல அச்சம் ஏற்பட்டதால் என்ன நடந்தது தெரியவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை காலையில்தான் அறிந்துகொண்டேன்” என இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையாக உள்ள வீட்டில் வசிப்பவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். ...

Read More »

சவூதியில் இறந்த கணவனின் சடலத்தை மீட்க பெண்ணின் பொது வேண்டுகோள்!!!

சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்றிருந்த சமயம் அங்கு சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தையும், அதற்கான இழப்பீட்டு நிவாரணத்தையும் பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் மனைவி பொது வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்படி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு 2 எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி நேசராஜா (வயது 38) என்பவர் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சவூதி அரேபியாவில் சம்பவித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பாக உயிரிழந்த நபரின் மனைவி ஹேமமாலினி (வயது 42) இந்த ...

Read More »

வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த 11 பாடசாலைகள் புனரமைப்பு!!!

கடந்த வருட இறுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த 11 பாடசாலைகளை புனரமைப்பதற்காக ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த மாதம் 31.5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது. மேற்படி கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று காலை (27) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மேலும் ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட இந்த நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 3 பாடசாலைகளும் புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த புனரமைப்பு ...

Read More »

மட்டக்களப்பு தாளங்குடாவில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்!!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மேற்படி சடலமாக மீட்கப்பட்ட பெண் 60 வயது மதிக்கத்தக்க பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றதுடன் இன்னமும் சடலம் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர். மேலும் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை தாளங்குட கடற்கரை பகுதியை அண்டிய வேடர்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் முற்றாக எரிந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கொண்ட சடலம் ஒன்றை ...

Read More »

யாழிலில் பல்கலைகழக மாணவர்களின் அச்சுறுத்தல்! பல மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் வளாகத்தினுள் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி நேற்று முன்தினம் புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக அச்சமடைந்த புதுமுக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பதற்றமடைந்து, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறித்துள்ளனர். மேலும் சம்பவத்தையடுத்து உப விடுதிக் காப்பாளர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முனைந்த போது, சிரேஷ்ட மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளினால் உப விடுதிக் ...

Read More »

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி தீர்மானம்!!!

பஸ்களில், அனுமதி வழங்கப்பட்ட காணொளி மற்றும் பாடல்களை மாத்திரம் ஒலி / ஒளிபரப்புவதை கட்டாய மாக்குவதற்கு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மேற்படி இந்தத் திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.பஸ்களில் ஒலி மற்றும் ஒளிபரப்பாகும் பாடல்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் கலாசாரத்துக்கு ஒவ்வாத காட்சிகள் ஒளிபரப்பாகுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி தெரிவித்துள்ளார். பஸ்களில் ஒலி/ ஒளிபரப்பாக்குவதற்கான பாடல்கள் மற்றும் காணொளிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ...

Read More »

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அணியை உருவாக்குவதற்கு பங்களிப்பு!!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அணியை உருவாக்குவதற்கு எங்களுடைய பங்களிப்பும் இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் கொள்ளத்தேவையில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ச.அரவிந்தன் தெரிவித்தார். மேற்படி யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அரவிந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடிப்படை கொள்கையில் இருந்து விலகிச் சென்று பல வருடங்களாகிவிட்டது. திரும்பி அவர்கள் மக்களுடைய பிரச்சினைகள் நிலைப்பாடுகளை கருத்தில் கொண்டு செயற்படுவார்கள் ...

Read More »