Author Archives: லீலன்

கால அவகாசம் கொடுப்பதால் சாட்சிகள் அழிக்கப்படுகின்றது!!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவது இன படுகொலைகளின் எஞ்சியுள்ள சாட்சிகளை இல்லாதொழிக்கும் செயற்பாடு என சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கனகரட்ணம் சுகாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சாட்சிகள் அழிந்துகொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளருமான கனகரட்னம் சுகாஸ், அதற்கு இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

தமிழை பறைசாற்றி பெருமைப்படுத்திய தமிழ் மகன்! பல விருதுகளுடன் நாடு திரும்பினான்!

இலங்கைத்தீவின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் கோரக்கன் கிராமத்தின் இளம் கண்டுபிடிப்பாளர் சோமசுந்தரம் வினோஜ்குமார் சர்வதேச அரங்கில் தமிழர் பெருமையை ஓங்கி ஒலிக்க செய்த இளம் விஞ்ஞானி.மேற்படி கண்டுபிடிப்புகள் உருவ அளவில் பெரியதாகத்தான் இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டிற்குள் உட்பட்டதல்ல. சிறயவையாகவும் எழிய மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலும் சர்வதேச சந்தையில் அவற்றிற்கான தேவையினை பொறுத்தே உத்தரவாதமும் தரமும் தான் கண்டுபிடிப்புக்களுகான அந்தஸ்த்தை உயர்த்துகின்றது என்பது இளம் கண்டுபிடிப்பாளன் வினோஜ்குமாரின் கருத்து. எனவே சர்வதேச அறிவியல் புலமை, கண்டுபிடிப்பு மற்றும் ...

Read More »

யாழில் மர்மநபர்களின் துணிகர செயல்! அதிர்ச்சியில் மக்கள்!

யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் இடம்பெற்று வாகனம் எரிந்து நாசமாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் இன்று மாலை 3.10 மணியளவில் யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் இருவர் வீட்டுக்கு வெளியே நிற்கும் போது நாலு பேர் உள்ளே நுழைந்து மோட்டார் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு பெட்ரோல் குண்டு குண்டு தாக்குதலை மேற்கொண்டதோடு வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி சென்றுள்ளார்கள். ...

Read More »

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் அவலம்!!!

புதிய விலைச்சூத்திரத்தின் அடிப்படையில்,92 ஒக்ரின் பெற்றோலின் விலை 6 ரூபாவாகவும் 95 ஒக்ரின் 5 ரூபாயாலும், ஓட்டோ டீசல் விலை 4 மற்றும் சுப்பர் டீசல் விலை 8 ரூபாயாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு. புதிய விலையின் படி பெற்றோல்- (92) – 129 ரூபா, (95)- 152 ரூபா , ஓட்டோடீசல் 99 ரூபா , சுப்பர் டீசல்126 ரூபா.எனவே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More »

கோட்டாபய ராஜபக்‌ஷ அரச நிதி மோசடி தொடர்பான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.

டீ.ஏ ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப்பணிக்காக அரச நிதியான 33.9 மில்லியன்களைதவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னால் பாதுகாப்புச்  செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் மேலும் 7 நபர்களுக்கு எதிராக தெடுக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை ரத்துச் செய்த மூவர் அடங்கிய உயர் நீதிமன்றம் குறித்த வழக்கை விசாரணை செய்யுமாறு தீர்பளித்துள்ளது. அதாவது குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபர்கள் குற்றவாளிகளா? அல்லது நிரபராதிகளா ? என்பதனை முடிவெடுக்கப்படல் வேண்டும் என்பதாக தீர்ப்பாகியது.குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு ...

Read More »

எரிபொருள் விலை கூடுமா? அல்லது குறையுமா? அச்சத்தில் மக்கள்!

எரிபொருள் விலை பற்றிய முடிவை எட்டும் வகையில் இன்று (11) பிற்பகல் விலை சூத்திரத்துடன் சம்பந்தமான குழு ஒன்றுகூடவுள்ளது.மேற்படி குறித்த ஒன்றுகூடலில் எரிபொருள் விலையேற்றம் அல்லது விலை குறைப்பு பற்றிய முடிவு எட்டப்படவுள்ளது. மேலும் எரிபொருள் விலை தீர்மாணிக்கும் குழுவானது மாதாந்தம் 10ம் திகதி ஒன்றுகூடி தீர்மாணங்களை எடுப்பது வழக்கமாக இருப்பினும் நேற்றைய தினம் வாராந்த விடுமுறை நாள் என்பதால் இன்று ஒன்றுகூடவேண்டி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 10ம் திகதி டீசல் மற்றும் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை தலா இரண்டு ரூபாவினால் குறைக்கப்பட்டது ...

Read More »

இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!!!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு இம்முறை வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பில் இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.இதற்காக 20000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் நாடாளுமன்றில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை என்னவென்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிருந்தார். எனினும் இந்த கேள்விக்கான பதிலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் கூறிய அவர்,”அமைச்சரவைப் பத்திர அனுமதியின்கீழ் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ...

Read More »

யாழிலில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!!!

யாழிலில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேற்படி யாழ்.மண்கும்பான் பகுதியில் குறித்த இளைஞனின் வீட்டில் இருந்தே போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மண்கும்பான் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் ஹெரோயின்போதை பொருளை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் நபரை கைது செய்து அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து நான்கு சிறு பொதிகளில் அடைக்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர். எனினும் மீட்கப்பட்ட போதைப் பொருள் 300 மில்லி ...

Read More »

நடைபாதை வியாபாரிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை!!!

வவுனியா இலுப்பையடி சந்தைக்கு முன்னால் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்து வந்த வியாபாரி ஒருவர் தனது வியாபார நடவடிக்கையின் போது உயிரிழந்துள்ளார்.மேற்படி 155ஆம் கட்டை இரணைமடு கிளிநொச்சியைச் சேர்ந்த 62 வயதுடைய நடைபாதை வியாபாரியே இன்று காலை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா இலுப்பையடி, தினச்சந்தைக்கு முன்னாலுள்ள சந்தை சுற்றுவட்ட வீதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் மேற்கொண்டுவரும் குறித்த வியாபாரி இன்று காலை 6மணியளவில் கடை ஒன்றில் தேனீர் குடித்துவிட்டு தனது நடைபாதை வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க ...

Read More »

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்த நன்மை!!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் ஒரு மாணவிக்கு சைக்கிள் என்பன வழங்கப்பட்டன. மேற்படி துளி நற்பணி மன்றத்தின் ஊடாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த .ச.சந்திரனின் நிதியுதவியில் இவை வழங்கப்பட்டன. பரந்தன் இந்து மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முருகானந்தாக் கல்லூரி,கிளிநொச்சி கனிஷ்டா மகா வித்தியாலயம், விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன

Read More »