Author Archives: Mayuran Perinparasa

நான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.

நான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேற்படி ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. மேலும் அவ்வாறு கலைப்பதாக இருந்தால்,பெரும்பான்மை இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.எனினும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டமை அடிப்படை உரிமை மீறல் ஆகும். அத்துடன் இச் செயல் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில் பிரதம நீதியரசர் தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த ...

Read More »

மனிதப் புதைகுழி அகல்வு தொடர்பாக மன்னாரில் கவண ஈர்ப்பு போராட்டம்.

வட கிழக்கு மாவட்டங்களில் உள்ள சிவில் அமைப்புக்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் என பல அமைப்புக்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கங்களின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து  நடாத்தப்பட்ட இக்கவண ஈர்ப்பு போராட்டத்தின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி மன்னார் மாவட்டத்தில் மனிதப் புதைகுழி அகழ்வில் பல மனித எச்சங்களை அகழ்ந்தெடுக்கப்பட்ட வருகின்றமை யாவரும் அறிந்த ஒரு விடயமாகும்.அந்தவகையில் இவ்வகழ்வில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்களில் யாருடையது எனவும் அவர்களில் அரசாங்கம் பதில் கூறவேண்டும் என்பது தொடர்பாக ...

Read More »

வர்த்தமானி அறிவித்தல் பற்றிய வழக்கு தீர்ப்பு இன்று 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரதம நீதியரசர் நளின் பெரேரா நீதியரசர்களான சிசிர த ஆப்ரு, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஸித் மலலகொட, முர்து பெர்னாண்டோ ஆகிய உயர்நீதிமன்ற நீதியர்சர்கள் 7 பேர் கொண்ட குழுவால் விசாரணை செய்யப்பட்டு வந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம்  கலைக்கப்படுவது தொடர்பில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான  தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது. ...

Read More »

தனியார் பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதல்.

தனியார் பேரூந்து சாரதியின் கவனயீனம் காரணமாக மோட்டார் சைக்கிள்  சுற்றுவட்டத்தில் முந்திச்செல்லப் பட்ட போதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தெய்வாதினமாக மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். மேற்படி மட்டக்களப்பு தந்தை செல்வா திருவுருவம் சிலைக்கு முன்பாக பாரிய விபத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இதன் போது மோட்டார்சைக்கிள் தனியார் பேரூந்தின் கீழ் பக்கமாக சிக்குண்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது அத்துடன் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் இவ்விபத்தின் பின்னர் தனியார் பேரூந்து சாரதிக்கும் பொதுமக்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் ...

Read More »

நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் ஜனவரி 06 திகதி வரை விடுமுறை.

2019 ஆம் ஆண்டின் புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் சகல நீதி மன்றங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது மேற்படி நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி 06 ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது இந்தநிலையில் அடுத்த ஆண்டின் ஜனவரி 07ஆம் திகதி தொடக்கம் நாட்டின் சகல நீதி மன்றங்களும் மீண்டும் இயங்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மணல் ஏற்றி சென்ற டிப்பர்-முச்சக்கர வண்டி மோதல்

மட்டக்களப்பு பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் மரணம். மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மஹ்ரூப் மௌசூன் (29 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் – மட்டக்களப்பு பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (11) இரவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து ...

Read More »

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும்பான்மை ஆதரவு-பிரேரணை நிறைவேற்றம்.

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென தெரிவித்து கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென பிரேரணை நிறைவேற்றம்.பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வாக்களித்துள்ளது. இதற்கமைய, பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டன.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் சபையில் பிரசன்னமாகாத நிலையில், இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். பாராளுமன்றம் மீண்டும் 18 ஆம் திகதி நண்பகல் 1 ...

Read More »

கொழும்பில் இனம்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் சூடு

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இனம்தெரியாதவர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சிலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியதுடன் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More »

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக மனு தாக்கல்.

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக, சட்டதரணி அருண லக்சிறி மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்பு தீர்மானம் பற்றி உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமை மனுக்கள் பலவற்றை விசாரித்துக்கொண்டிருந்த போது பாராளுமன்றத்தை சபாநாயகர் கூட்டிய தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தியதாக சட்டத்தரணி அருண லக்சிறி மேற்படி மனுவை தாக்கல்செய்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக அரசியலமைப்பின் 105 (3) ஆம் சட்டப்பிரிவின்படி நீதிமன்றத்தை அவமதித்தமைக்கான குற்றச்சாட்டை தாக்கல் செய்யும் மனு 10 திகதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தை கலைக்கும் ...

Read More »

பாராளுமன்றில் ரணிலுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு.

நாளை (புதன்கழமை) பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளது. மேற்படி தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்படவுள்ள இந்தப் பிரேணைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவுள்ள அதேநேரம், ஜே.வி.பி. ஆதரவாக வாக்களிக்காது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பியினரால் கொண்டுவரப்பட்ட நான்கு நம்பிக்கையில்லா பிரேரணைகளும், சபையில் பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. எனினும், இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக தெரிவித்துவரும் நிலையிலேயே, நாளைய தினம் ரணில் ...

Read More »