Author Archives: Mayuran Perinparasa

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்த நன்மை!!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் ஒரு மாணவிக்கு சைக்கிள் என்பன வழங்கப்பட்டன. மேற்படி துளி நற்பணி மன்றத்தின் ஊடாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த .ச.சந்திரனின் நிதியுதவியில் இவை வழங்கப்பட்டன. பரந்தன் இந்து மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முருகானந்தாக் கல்லூரி,கிளிநொச்சி கனிஷ்டா மகா வித்தியாலயம், விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன

Read More »

மாகந்துர மதூஷுக்கு சார்பாக இலங்கை வழக்கறிஞர்கள்!!!

துபாயில்வைத்து கைதான பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷுக்கு சார்பாக வாதாடும் வகையில் இலங்கையிலிருந்து 06 வழக்கறிஞர்கள் துபாயிற்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் பிரபலமான சில வழக்கறிஞர்கள் அடங்குதாகவும் தெரியவருகிறது. எனினும் குறித்த வழக்கறிஞர்களுக்கு துபாய் நீதிமன்றில் ஆஜராக முடியாது என சட்டவல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.அதற்கான காரணம் இலங்கையில் உரோம டச்சு சட்டமும் துபாயில் ஷரீஆ சட்டம் செயற்படுவதாகும்.

Read More »

களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்!!!

கித்துல்கல – களுகொவ்தென்ன பகுதியில் களனி ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேற்படி இந்த இளைஞன் நேற்று மாலை நீராடச் சென்று காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற குறித்த இளைஞன், கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். நீரில் மூழ்கிய இளைஞனை ...

Read More »

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் மைத்திரி!!!

அமெரிக்க குடியுரிமையை கோட்டாபய ராஜபக்ச கைவிடும் முயற்சி வெற்றியளிக்காது என்ற நம்பிக்கையிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளார்.என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் முயற்சி வெற்றியளிக்காது என்று அதிபர் சிறிசேன உள்ளிட்ட சிலர் நம்புகின்றனர். இது அதிபர் வேட்பாளராக மீண்டும் சிறிசேன போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனினும் கடந்த ஆண்டு ஐ.தே.கவின் காதுகளுக்கு எட்டிய ...

Read More »

வவுனியாவில் இளம் தம்பதியரின் ஒரு மாத குழந்தை மரணம்!!!

தாய்ப்பால் புரக்கேறியத்தில் ஒருமாத குழந்தை ஒன்று வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் இன்று உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ஒரு மாதக் குழந்தை பாலுக்கு அழுத நிலையில் தாய் பாலினை ஊட்டியுள்ளார்.தாய்பால் புரக்கேறியுள்ளது.  உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் முயற்சி பலனின்றி குழந்தை மரணமடைந்துள்ளது.ரங்கநாதன் ரவீன் என்கின்ற ஒரு மாத ஆண் குழந்தையே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

Read More »

விடுதலை புலிகளின் பாணியில் இளைஞருக்கு தண்டனை!!!

யாழில் இடம்பெற்ற சில திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர், பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின் பாணியில் தண்டனையும் கொடுக்கப்பட்டது.  அதாவது, இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றை தொங்கவிட்டு, வீதியில் இழுத்து செல்லப்பட்டார். அதன் பின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.

Read More »

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் பேசினர்.

இந்தியாவின் குடியரசு நாளை முன்னிட்டு கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில்- அரசியல் எதிரிகளாக இருக்கும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் ஒரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேற்படி இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 26ஆம் நாள், கொழும்பில் கலை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தனர்.அவர்கள் இருவரையும், மங்கள விளக்கேற்றுவதற்கு இந்தியத் தூதுவர் அழைப்பு விடுத்தார். மேலும் நீண்டநாட்களாகப் பேசிக் கொள்ளாத இருவரும், அந்த தருணத்தில் அருகருகே நின்றிருந்தனர். ...

Read More »

புதியதோர் பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த சிலர் விசேட அதிரடிப்படையால் கைது!!!

சிறிலங்காவின் மற்றுமொரு பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த சிலர் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேற்படி பாதாள உலக கும்பலின் முக்கிய புள்ளியென சொல்லப்படும் ஷானுக்க மதுஷான் (ஒழு மரா) உட்பட அவரது பதினோரு சகாக்கள் வென்னப்புவவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இதேவேளை மற்றொரு பாதாள உலகக் கும்பல் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடிக் கைதுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More »

கல்முனை வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற்றப்படும்!!!

கல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோள் நிறைவேற்றித்தரப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேற்படி கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் நிகழ்விற்கு விஷேட அதிதியாக வருகைதந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,கல்முனை பிரதேசத்தில் பிரதேசவாழ் மக்கள் மிகவும் வேண்டிநிற்கின்ற, கடந்தகாலங்களில் செயற்பட்டிருக்கவேண்டிய, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. எனவே அந்தவிடையத்தில் ஒட்டுமொத்தமாக. கல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோளாக இருப்பது ...

Read More »

நூறு கோடி நஷ்ட ஈடு கேட்கும் அமைச்சர் ரிஷாத்பதியுதீன்.

மக்கள் மீது தனக்குள்ள செல்வாக்கு ,கீர்த்தி என்பவற்றை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்த,தொழில்சார் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளர் லசந்த விக்கிரம சிங்கவிடமிருந்து ரூபா நூறு கோடி மான நஷ்ட ஈடாக வழங்குமாறு தனது சட்டத்தரணியூடாக அமைச்சர் ரிஷாத்பதியுதீன் கோரியுள்ளார். மேற்படி வியட்நாமிலிருந்து மிளகை இறக்குமதி செய்து,வேறு வகையில் பொதியிட்டு அவற்றை இந்தியா உட்பட வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளுர் உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில் அமைச்சரும், அவரது சகோதரரும் நடந்து கொள்வதாக லசந்தவிக்கிரமசிங்க வெளியிட்ட ...

Read More »