Author Archives: Mayuran Perinparasa

அனுமதி இன்றி சாராயம் விற்பனை செய்த நபருக்கு தண்டம்!!!

உரிய அதிகாரியின் அனுமதிப் பத்திரமின்றி 180 மில்லி லீற்றர் அரச சாராயத்தை விற்பனை செய்த யாழ்ப்பாணம் மீசாலை தெற்கைச் சேர்ந்த நபருக்கு, சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. மேலும் சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.வழக்கு விசாரணையில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

Read More »

நாங்கள் கால அவகாசம் கொடுப்போம்.ஆனால் தமிழ்மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.-சி வி விக்னேஸ்வரன்

கால அவகாசம் என்பது அரசாங்கத்திற்கு ஒரு நன்மையினை பெற்றுக்கொடுப்பதாக அமையும், தமிழ்மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேற்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட 130 மாணவர்களுக்கு மாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் புலம்பெயர் தமிழ் மக்களது நிதி பங்களிப்பில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் ...

Read More »

விடுதலை புலிகளை ஒழிப்பதற்கு பாரிய பங்காற்றியது இந்தியாவே!!!-மஹிந்த ராஜபக்ச.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது என மஹிந்த ராஜபக்ச இந்தியாவில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.மேற்படி 2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் பெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.”இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை பொறுத்தவரை சிறப்பான காலங்களும் காணப்பட்டுள்ளன மோசமான காலங்களும் காணப்பட்டுள்ளன.ஆனால் இரு நாடுகளையும் பாதிக்கும் போக்குகள் குறித்து புரிந்துகொள்வதும் எங்கள் பரஸ்பர நன்மைகளிற்காக ...

Read More »

ஒத்துழைப்பு வழங்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!!

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதேவேளை, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் அமைப்பதானால் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

தமிழ் மொழியை நெஞ்சில் பதித்து போராடிய தமிழீழ விடுதலை புலிகள்…

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அதே தமிழர்கள் எழுச்சியடைந்தர்களோ அந்த மொழியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் மூர்க்கத்தனமான ஓர்மத்தினைக் கொண்டிருந்தார்கள். மேலும் போர்க்களமும் பங்கர் வாழ்க்கையும் மட்டும் தமது குறிக்கோளை எட்டிவிடுவதற்கு துணை நிற்கப்போவதில்லை என்பதை விடுதலைப் புலிகள் நன்குணர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் அவற்றிற்கும் மேலாக நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களோடு மொழிக்காப்பு நடவடிக்கையிலும் சமபங்கு அளவுக்கு இறங்கினார்கள். மேலும் ...

Read More »

ஜனாதிபதியை பாராட்டிய-கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கன. இந்த விடயத்தில் அவர் கொண்டுள்ள உறுதியும் அதிரடியும் பிரமாதம். குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தற்போது போதைப்பொருள் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றன. எனினும் அவற்றை ஒழிப்பதற்கும் ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இவ்விடயத்தில் பிரதான பொலிஸ் அதிகாரியாகச் செயற்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு சேவை நீடிப்பை வழங்கியுள்ளமையும் வாழ்த்துக்குரியது என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  மேலும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு ...

Read More »

அலுகோசு பதவிக்கான விண்ணப்பம்-சிறைச்சாலைகள் திணைக்களம்.

மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதியினால் எடுக்கப்படவுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அலுகோசு பதவிக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் விண்ணப்பங்களை கோரப்படவுள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என திணைக்களம் கூறியுள்ளது. மேலும் இதன் பிரகாரம், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அலுகோசு பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.இதேவேளை, தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ...

Read More »

பாடசாலையில் கைக்குண்டு மீட்பு!!!

அஹூங்கல்ல பிரதேசத்தில் பாடசலை விளையாட்டரங்கில் இருந்து கை குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி அதனை செயலிழக்க செய்வதற்காக காவற்துறை அதிரடி படை பிரிவின் குண்டு செயலிழப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த பாடசலையில் பாதுகாப்பு சுவர் ஒன்றை அமைத்து கொண்டிருந்த சில தொழிலாளர்களால் குறித்த கை குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கொடூர செயலால் தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை!!!

04 வயது மகளை கொலை செய்து கலா ஓயாவில் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரான தாயார் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.புத்தளம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேற்படி சந்தேக நபரான தாயார் நீதவானை சந்தித்து இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் சடலம் இதுவரையில் கிடைக்கபெறவில்லை என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Read More »

ஞானசார தேரருக்கு நீதிமன்ற உத்தரவு!!!

ஹோமாகம மேல் நீதிமன்றில் இன்றைய தினம் ஞானசார தேரரின் மேன் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாத கால சிறைத்தண்டனை 5 வருடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஹோமாகம நீதிமன்றம் இன்றைய தினம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Read More »