Author Archives: Mayuran Perinparasa

மக்களை நெகிழ வைத்த ஒருவரின் செயல்!

இலங்கையில் மக்கள் நிம்மதியாகவும், நலமுடனும் வாழ வேண்டும் என்று அன்பர் ஒருவர் நீண்டதூர பிரதட்டை நேர்த்திக்கடனை மேற்கொண்டுள்ளார்.மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை 150Km தூரம் இந்த பிரதட்டை நேர்த்திக்கடனில் குறித்த அன்பர் உருண்டு செல்லவுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று காலை 7.00 மணிக்கு யாத்திரை பயணத்தை ஆரம்பித்துள்ளார் என்றும், முதற்கட்டமாக மன்னார் தள்ளாடியில் இருந்து திருக்கேதீஸ்வரம் வரை செல்லவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செயற்பாட்டை மக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர்.

Read More »

தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டுகளை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கையில் அறிமுகமாகியுள்ள புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகங்கள் ஊடாகவும் கடவுச் சீட்டுக்களை மாவட்டச் செயலகத்தினூடாகவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதனை ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.இதுதொடர்பில் தெரியவருவதாவது,இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்தார். எனினும் நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன.பிரதேச ...

Read More »

தேசிய அரசாங்கமொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக்கட்சி யோசனை!

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளமைக்கான நோக்கத்தை ஐக்கிய தேசிய கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.  மேலும் இதுதொடர்பாக நாடாளுமன்ற முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அரச நிர்வாகத்தில் தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நேர்மையாக செயற்படும் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக இணைப்பதே இதன் நோக்கம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் தீவிரவாதங்களுக்கு எதிராக நாட்டை அபிவிருத்தி செய்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தல் மற்றும் மக்களின் உரிமையை பாதுகாத்து பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்கி செயற்பாடுகளை துரிதப்படுத்தும் எண்ணம் கொண்ட அனைத்து ...

Read More »

தேசத்துக்காக உயிர் துறந்த மாவீரனுக்காக யாழில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கையின் தேசியக் கொடி இன்று இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவமானது இலங்கை தமிழர்களின் வரலாறு 62 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மீண்டும் பதிவுசெய்யப்படுகிறது. மேலும் சரியாக 62 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் திருகோணமலையில் இலங்கையின் தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக்கொடியை ஏற்றியதற்காக இளைஞர் ஒருவரை சிங்களப் பொலீசார் சுட்டுக்கொன்றனர். அதே சம்பவத்தை சரியாக 62 ஆண்டுகள் கழித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் செய்துள்ளனர்.மேலும் 04.02.1957அன்று சிங்ளச்சிறீ சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர். ...

Read More »

மவுசாகலை – நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம்!

மஸ்கெலியா மவுசாகலை நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். மேலும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பின் புரத்திலுள்ள மவுசாகலை நீர்தேக்க கரையோர பகுதியிலே இன்று (04) காலை இவ்வாறு சடலம் மீட்கப்படுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணணடாத போதிலும் கடந்த 02 ஆம் திகதி மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் வசிக்கும் சிறுமியொருவரை காணவில்லை என முறைபாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் மீட்கப்பட்ட சடலம் ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்டபின் பிரேத பரிசோதணைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் ...

Read More »

கட்டுநாயக்கா வான்படை தளத்தை தாக்க செல்வதற்கு முன் தலைவரிட்ட கட்டளை!

தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோகபூர்வமாக உரிமை கோரப்பட்ட முதலாவது வான்புலிகள் அணியின் தாக்குதலிற்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. அதாவது கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26ஆம் நாள் கொழும்பிலுள்ள கட்டுநாயக்க வான்படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்துவதற்காக இரணைமடு வானூர்தி ஓடுதளத்திலிருந்து விடுதலைப் புலிகளின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதனை இயக்கிச் சென்ற இரண்டு வானோடிகளிடமும் தலைவர் பிரபாகரன் கண்டிப்பாக கூறிய விடயமே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது. அதாவது கேணல் ரூபன் மற்றும் ...

Read More »

பிரதமரினால் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு புதிய செயலணி உருவாக்கம்.

புலம்பெயர் தேச முதலீட்டாளர்கள் இனி வடக்கு கிழக்கில் நேரடியாக முதலீடுகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். வடக்கு கிழக்கில் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் நேரடியாக முதலீடு செய்யவும் வடக்கு கிழக்கில் நேரடி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய செயலணி அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி இந்த செயலணியின் நிறைவேற்றுக் குழு தலைவராக பிரதமர் ரணில் இருக்கின்றார்.குழு உறுப்பினர்களாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், வடமாகாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் என எட்டுப்பேர் அங்கம் வகிக்கின்றனர். செயலணியின் பணிப்பாளர்களாக ...

Read More »

சுதந்திரதின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பம்.

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது. மேற்படி இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்குவதுடன் மாலைதீவு ஜனாதிபதியும் அவர்தம் பாரியாரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னதாக சிறப்பு விருந்தினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றதுடன் சிறிலங்காவின் தேசியக் கொடி ஏறலுடன்  நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதை முழுமையாக நிராகரிப்பதாக கூறினார்.  அத்துடன் முன்னர் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்துடன் ...

Read More »

தமிழர்களை தாக்கி சுதந்திரதினத்தை கொண்டாடும் சிங்கள மக்கள்!!!

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழர் குடியிருப்பொன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேற்படி களுத்துறை, மில்லகந்த திப்பட்டா தோட்டத்தில் உள்ள தமிழ் மக்கள்மீதும் அவர்களது குடியிருப்பு மீதும் இந்த தாக்குதல் பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. எவ்வாறாயினும் தாக்குதலாளிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை ஏதும் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக வெளியில் உலாவித் திரியவா இந்த சுதந்திர தினம்? என்று பலரும் தமது விசனங்களை சமூக ...

Read More »

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாள்ளாக்கினார்கள் தமிழர்கள்.

இலங்கையின் சுதந்திர தினமாகிய இன்றைய நாளை துக்கமும் துயரமும் வலியும் நிறைந்த கரிநாளாக பிரகடனபடுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை செய்து கொண்டு இருக்கிறது தமிழர் நிலம்  அந்த வகையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் பகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் இணைந்து பாரிய அளவில் எதிர்ப்பினை காட்டி தமது கண்டங்களை தெரிவித்தனர் இந்த கண்டன பேரணியில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், கஜேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பலர் ...

Read More »