Author Archives: நாரதர்

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு! சாந்தபுரத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி.

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் கனகாம்பிகைக்குளம் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகிய இந் நிகழ்வை கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ப.குமாரசிங்கம் தலைமைதாங்கினார். நிகழ்வின் முதலில் பொதுச்சுடரினை மாவீரன் சாந்தன் அவர்களின் தாயார் மீனா அம்மா ஏற்றி வைக்க பெற்றோர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த சுடர்களை ஏற்றி அஞ்சலித்தனர். பின்னர் மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் உறவுகளினால் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்புரைகளை மேனாள் வடமாகாண ...

Read More »

நாடாளுமன்றக் கலைப்புக்கு இடைக்காலத் தடை !

நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. வரும் டிசம்பர் 07ம் திகதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பிற்கு இணங்க, பொதுத்தேர்தலிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் நளின் ஜயலத் பெரேரா, பிரசன்ன ஜெயவர்த்தன, பிரியந்த ஜயவர்த்தன ஆகிய மூன்று நீதிபதிகளை கொண்ட ஆயம் சற்று முன்னர் இந்த உத்தரவை விதித்தது. டிசம்பர் மாதம் 5,6,7ம் திகதிகளில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 09ம் திகதி ...

Read More »

சிறப்பாக இடம்பெற்ற கனகாம்பிகைக்குளம் தூயதமிழின் திறப்பு விழா!

கனகாம்பிகைக்குளம் தூயதமிழ் சனசமூக நிலையத்தின் வாசிகசாலை திறப்பு விழாவும் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளும் இன்று (06) மாலை நான்கு மணியளவில் சனசமூக நிலையத்திற்கென ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் தூயதமிழ் சனசமூக நிலையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ப.உமாகேசன் தலைமையில் நடைபெற்றது. தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கு புதிய நிர்வாகம் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் குறிப்பிட்ட நிகழ்வு இன்று விமர்சையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக நிகழ்வின் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்குகள் விருந்தினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. மௌன இறை வணக்கத்தை அடுத்து ஒதுக்கப்பட்ட கட்டடத்தின் நாடாவினை வெட்டி வாசிகசாலை திறந்து ...

Read More »

சோகத்தில் ஆழ்த்திய விபத்து! கிளிநொச்சியில் இரண்டு இளைஞர்கள் பலி!

  கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று செவ்வாய் கிழமை மாலை ஏழு இருபது மணிக்கு இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். சம்பவம்  தொடர்பில் தெரியவருவதாவது தென்னிலங்கையிலிருந்து  யாழ் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி  வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி  நோக்கி பயணித்த உருந்துருளியும் விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில்  பயணித்த இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.  விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே  பலியாகியுள்ளார். மற்றொருவர்  வைத்தியசாலைக் கொண்டு சென்ற போது இறந்துள்ளார்.  இந்த விபத்தில்  இறந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த  செல்வராஜா ...

Read More »

உங்களால் செய்ய முடியாது ! கூட்டமைப்புக்கு வியாழேந்திரன் பகிரங்க சவால்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய  பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன். இதில் பிரதமர் தரப்புடன் எந்த தொடர்பும் இல்லை.கடந்த காலங்களில் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வந்தது. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையிலேயே, ஜனாதிபதியிடம் 11 அம்சக் கோரிக்கையினை முன்வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.இதில், அரசியல் கைதிகள் விவகாரம், காணி ...

Read More »

வியாழேந்திரனை கட்சியில் இருந்து நீக்குமா புளொட்?

ஜனாதிபதியினால் கிழக்கு பிராந்திய அபிவிருத்தியினுடைய பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இருக்கின்ற வியாழேந்திரனுக்கு எதிராக அவர் சார்ந்திருக்கின்ற கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்தக் கட்சியை மேற்கோள்காட்டி செய்தி கிடைக்கப்பெற்றிருக்கிறது. தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அசாதாரண சூழ்நிலையை தமது இனத்திற்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சிக்கு தெரியாமல் அனுமதியில்லாமல் பிரதி அமைச்சர் பொறுப்பினை ஏற்று இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என புளொட்அமைப்பினை மேற்கோள்காட்டி செய்தி கிடைக்கப் ...

Read More »

விலைபோனார் வியாழேந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் மைத்திரி மகிந்த பக்கம் தாவி  அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்றுக்கொண்டார்.   தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்றுக் காலை பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.   கனடாவிலிருந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நேரடியாக மஹிந்த ராஜபக்ச அணியை சந்தித்துள்ளார், மட்டக்களப்பை சேர்ந்த பாதிரியார் ஒருவரின் ஏற்பாட்டில், வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.   மகிந்த ராஜபக்ச உடனான ...

Read More »

மஹிந்தவுக்கு வாக்களிப்பாரா சம்பந்தன்? வெளியாகும் தகவல்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமர் யார் என்ற சர்ச்சை நிலவி வரும் இந்நேரத்திலேயே கூட்டமைப்பின் அணுகுமுறைகள் எவ்வாறு என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் சாசனத்திற்கு அமைய நாட்டு மக்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட செயல்பாடுகள் இருக்கும் எனவும், ...

Read More »

மீண்டும் ரணில் அரசு உருவானால் அதற்குக் காரணம் நாங்களே! – மனோ கணேசன்.

  எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் சவாலில் வெற்றி பெற்று மீண்டும் ரணில் அரசாங்கம் உருவானால் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி மிகப் பிரதான பங்கு வகிக்கும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார். இன்று நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு, கண்டி, களுத்துறை, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மாவட்ட பேராளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் சிறுபான்மை கட்சிகளில் உள்ள நாடாளுமன்ற ...

Read More »