செய்திகள்

புத்தளம் விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியை சேர்ந்த 62 வயதான பெண்ணொருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான பெண்ணொருவரும், வவுனியாவை சேர்ந்த 38 வயதான ஆணொருவரும் சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண்ணொருவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், குறித்த சம்பவம் யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்த வேன் ஒன்றே, இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேனும் ...

Read More »

கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது!

வடக்கு கடற்படை கட்டளையின் படி கடற்படையினரினால்,  பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 91.561 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதி இலங்கை எல்லை ஊடாக இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் திக்கம் பகுதிகளில் வசிக்கின்ற 47 மற்றும் 60 வயதானவர்களென, அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    ...

Read More »

சந்தேகநபரை கைது செய்யச்சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கொடூரம்!

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பக்மீகொல்ல பகுதியில், கடமையிலிருந்த பொலில் அதிகாரியொருவர், கத்திகுத்துக்கு இலக்கான நிலையில், குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக சென்றிருந்த போது, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது, கடமைக்குச் சென்றிருந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, சந்தேகநபரை ​மடக்கிப் பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சோதனையிட்ட  போது, அவரிடமிருந்து வெளிநாட்டில்  உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், இவர் பக்மீகொல்ல பகுதியைச் சேர்ந்த, 22 வயதுடையவர் எனவும்,  இவரை நீதிமன்றில் அஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை ...

Read More »

அர்ஜுன மஹேந்திரன் குறித்து தெளிவான விளக்கம் தேவை; ஜனாதிபதி தெரிவிப்பு!

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய முக்கிய நபரை, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது சம்பந்தமான தனது கொள்கை பற்றிய தெளிவான கூற்றை, சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட வேண்டும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். தான் இதுபற்றி சிங்கப்பூர் பிரதமருடன் கலந்துரையாடி உள்ளதாகவும், ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று (18) முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்     கலந்துகொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.        ...

Read More »

தமிழர் பண்பாட்டினை எடுத்துக்காட்டும் மரபுரீதியான போட்டி!!!!

வலிகாமம் வடக்கு கீரிமலை நகுலகிரி இளைஞர் கழகத்தினால் கருகம்பனை சீதாவளை சவாரி திடலில் மரபு ரீதியான மாட்டுவண்டி போட்டி நடத்தப்பட்டுள்ளது. மேற்படி ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய யாழ் மாவட்ட தலைவர் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ஆதவன் தெரிவிக்கையில்….போட்டி மிக்க துரிதமான இவ் உலகில், ஆரோக்கியமான எமது பாரம்பரியமான மரபு விளையாட்டுக்கள் பாதுகாக்கப்பட வேண்டியதே.  மேலும் தமிழர்களாகிய நாம் கலை, கலாச்சார பண்பாட்டு ரீதியாகவும், மரபாகவும் சரி, என்றும் நாம், வல்லரசே என்பதை பெருமிதத்துடன் இவ் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வில் ...

Read More »

எதிர்வரும் காலங்களில் இனிப்பு பண்டங்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்!!!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து இனிப்பு வகை பண்டங்களுக்கும் நிறக் குறியீடு குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். எனவே இதன்படி, சீனி, உப்பு மற்றும் கொழுப்பு போன்றவற்றின் அளவை குறிக்கும் வகையில் நிறக் குறியீடுகள் கட்டாயமாக்கப்படவுள்ளது.இதற்கு முன்னர் குளிர்பாணங்களுக்கு மட்டுமே நிறக் குறியீடு பயன்படுத்தப்பட்டது.

Read More »

சமூகவலையத்தில் வைரலாக பேசப்படும் அமைச்சர் மனோகணேசனின் மரக்கறி விற்பனை!!!

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோகணேசன் சுன்னாகம் சந்தையில் மரக்கறி விற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. மேற்படி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மனோகணேசன் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்துள்ளார். இதன்போது சுன்னாகம் மரக்கறி சந்தைக்கும் விஐயம் செய்திருந்தார். எனவே இதன்போது மரக்கறி விற்பனை செய்து கொண்டிரு ந்த வியாபாரி ஒருவரை எழுப்பிவிட்டு தான் அந்த இடத்தில் அமர்ந்து கொண்ட அமைச்சர் தனது நண்பர் பாஸ்கராவை நோக்கி, கொழும்பை விட யாழ்ப்பாணத்தில் பாகற்காய் மலிவு என கூறி விற்பனை செய்துள்ளார். ...

Read More »

மக்களுக்காக கிழக்கில் தோன்றிய புதிய கட்சி!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மறத்தமிழர் எனும் புதிய கட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி கட்சியின் ஆலோசகரான வைத்தியர் நாகமணி பத்மநாதன் தேசியக் கொடியேற்ற, தலைமை ஒருங்கிணைப்பாளர் வேலப்பு அன்புமணி கட்சிக் கொடியை ஏற்றியதை தொடர்ந்து கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மேலும் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை தொடர்ந்து மண்முனை மேற்கு -வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற மறத் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேலப்பு அன்புமணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்கவில்லையென தெரிவித்தார். எனவே ...

Read More »

கணவனை தேடித்தாருங்கள்! -கதறி அழும் மனைவி!!!

கல்லடி, திருச்செந்தூர் கடற்கரை வீதி, ஐந்தாம் குறுக்கினை சேர்ந்த ரெ.பத்மநாதன் என்ற 55 வதுயடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. மேற்படி கொழும்பில் இருந்து கல்லடி, திருச்செந்தூர்க்கு வந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது கணவர் கொழும்பில் மேசன் வேலை செய்து வருவதாகவும், மாதாந்தம் வீட்டுக்கு வந்துசெல்வதாகவும் கடந்த வியாழக்கிழமை வீட்டுக்கு வருவதற்காக பஸ் நிலையம் சென்றவர்தான் காத்தான்குடி வான் ஒன்றில் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாக கூறியதாகவும் காணாமல்போனவரின் மனைவி தெரிவித்தார். எனினும் ...

Read More »

கடும் சீற்றத்தில் மைத்திரி! கென்யாவில் இருந்து நாடுதிரும்பியதும் அவரச கூட்டம்

கூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த முடிவு செய்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் சீற்றம் அடைந்துள்ளார். மேற்படி கென்யாவில் இருந்து சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடன் தொலைபேசியில் உரையாடிய போதே இந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனினும் இதேவேளை நாடுதிரும்பியவுடன் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் மஹிந்த தரப்புடன் அரசியல் கூட்டணி பேச்சுக்களை தொடர்வதா இல்லையா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படவுள்ளது.

Read More »