செய்திகள்

நாட்டுக்குள் ‘போதைப் பொருள்’ பாவனை அதிகரிப்பு;

போதைப் பொருள் பாவனை நாட்டுக்குள் அதிகரித்துள்ளதாக, ​பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக நாட்டில் இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் போதைப்பொருள் பாவனையே காரணமெனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்தாண்டு மாத்திரம் 737 கிலோகிராம் ஹெரோய்ன், 40,000 கிலோகிராம் கஞ்சா, 1000 கிலோகிராம் கொக்கெய்ன், ஹசீஸ் எனப்படும் போதைப்பொருள் 13 கிலோகிராம் இவ்வாறு  கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.            ...

Read More »

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தீ விபத்து!

அனுராதபுரம் – கல்குளம் சந்திக்கருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலே தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கொள்கலன் வாகனத்திலிருந்து எரிபொருளை குறித்த நிலையத்துக்கு நிரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. தீயணைப்புக்கு பொலிஸ், மற்றும் பிரதேசவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து  செயற்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Read More »

முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னமும் எவரது பெயரையும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய எமக்கு இன்னமும் நீண்ட காலம் உள்ளது.  எனினும் முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். ஆகவே முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு எமது கட்சியை தயார்ப்படுத்த வேண்டும். தெரிவித்தார். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றமை குறித்து கருத்துக்கள் ...

Read More »

11 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 18 வயதுடைய இளைஞர் மல்லாவிப் பொலிஸாரால் கைது.

மாந்தை கிழக்கு பிரதேச பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் என்ற இடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 11 வயது சிறுமியை அழைத்துச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மல்லாவிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. “வீதியில் சென்ற மாணவியை குளம் காண்பிப்பதாகத் தெரிவித்த இளைஞன், அருகிலுள்ள குளத்துக்கு அழைத்துச் சென்று அங்கு மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார்.வீடு திரும்பிய சிறுமி பெற்றோரிடம் சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.  மேற்படி அவர்கள் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினர்.சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் 18 வயது இளைஞன் நேற்றிரவு கைது ...

Read More »

இலங்கை பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் கைதிகள் மீது தாக்குதல்.

இலங்கை சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மீது இலங்கை பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான சி.சி.ரி.வி காணொளிகள் அம்பலமாகியுள்ளன. மேற்படி கொழும்பு மருதானை – சி.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று காலை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் இந்த காணொளிகளை வெளியிட்டிருக்கின்றார். மேலும் அம்பாந்தோட்டை-அங்குனுகொலபெலஸ்ஸ என்ற பகுதியிலுள்ள சிறைச்சாலைக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் கடந்தவருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி மேற்படி இந்த சம்பவம் பதிவாகியிருப்பதாகவும் அவர் ...

Read More »

அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும்.-கோட்டாபய ராஜபக்ச.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பொதுச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கட்சி உறுப்புரிமையை பெறுவார் என அறியமுடிகின்றது. அதன் பின்னர் செயற்பாட்டு அரசியலில் நேரடியாகக் களமிறங்கும் கோட்டா, ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். மேலும் மக்கள் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கை நாடிபிடித்து பார்ப்பதற்காக, மாகாணசபைத் தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சியில் பிரசார பீரங்கியாக செயற்படவுள்ளார் என தெரியவருகின்றது. எனினும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்தவர்கள், அதன்பிறகு குறித்த பதவிக்கு ...

Read More »

இலங்கையில் அரச நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கு தலைவர்கள் நியமனம்.

நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. மேலும் இந்த கலந்துரையாடலின் பின்னர் அரச நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட குழுவிற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அண்மையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமையை அடுத்து, அமைச்சுக்களின் கீழ்வரும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பதில் தற்போது வரை இழுபறிநிலை ஏற்பட்டுள்ளமை ...

Read More »

நெடுந்தீவு கடல்பகுதியில் கடற்படைப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு மோதல்.

நெடுந்தீவு கடற்பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு 500 தமிழக மீன்பிடிப் படகுகள் ஊடுருவி மீன்பிடித்துக் கொண்டிருந்தன.அப்போது சிறிலங்கா கடற்படையின் ஷங்காய் வகையைச் சேர்ந்த ரணஜய என்ற அதிவேக பீரங்கிப் படகு, தமிழக மீன்பிடிப் படகுகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது. மேற்படி நெடுந்தீவுக் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையின் போது, சிறிலங்கா கடற்படையின் அதிவேக பீரங்கிப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்று, ...

Read More »

இலங்கையில் சிலநாட்களுக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும்.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மேற்படி அடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் குறிப்பாக கிழக்கு, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்று நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும் இன்றைய நாளுக்கான திணைக்களத்தின் வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ...

Read More »

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கூறுகிறார் புலிகளின் ஆயுதங்களே பாதாள உலக குழுக்களின் கைகளில் உள்ளன.

இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்களே இன்று பாதாள உலக குழுக்களின் கைகளில் உள்ளன என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கூறியுள்ளார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேற்று கண்டி அஸ்கிரிய மல்வத்து தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு இக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு இவ் விடயம் பற்றி குறிப்பிட்டுள்ளார். அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,நாட்டில் இடம்பெறும் மனித படுகொலைகளைகளுக்கு பாதாள உலகக் ...

Read More »