செய்திகள்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்ளும் இரண்டு குழு!!!

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில் இந்தமுறை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இரண்டு குழுக்கள் பங்குபற்றும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  மேற்படி கடந்த தினம் ஊடகப்பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு ஒன்று ஜெனீவாவில் தம்மை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் என்று குறிப்பிட்டிருந்தார். எனவே அதேநேரம் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான மற்றுமொரு குழுவும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பதாகவும், ...

Read More »

விடுதலைபுலிகளை முழுமூச்சாக நின்று தோற்கடித்த படையினர் தண்டனை அனுபவிப்பதா!!! மஹிந்த ராஜபக்ச.

ஸ்ரீலங்கா படையினர் மீதுள்ள குற்றக் கறைகளில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக குரல் கொடுக்க தவறியதால் அதன் பிரதிபலன்களை படையினரே அனுபவித்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார். மேற்படி தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிப்பதற்கு முழுவீச்சாக செயற்பட்ட ஸ்ரீலங்கா படையினருக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான முயற்சிகளில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஈடுபட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொழும்பின் புறநகர் பகுதியான ...

Read More »

தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த கிளிநொச்சி மக்களுக்கு அறைகூவல்!

“தமிழர்களின் சமூக மேம்பாட்டுக் கட்டமைப்புக்களின் தலைமையகமாகவும் தமிழர்களின் அரசியல் கோட்டையாகவும் கோலோச்சிய கிளிநொச்சி மாநகரம் தொடர்ந்தும் கொள்கை வழிநின்று, இனவாத சக்திகளினதும் அதற்குத் துணைபோகும் தரப்புகளினதும் சதிவலைகளை முறியடித்து  மண்ணின் மகத்துவத்தைக் காத்து தமிழ்த் தேசிய விடுதலையை முன்னெடுப்பதில் முன்னுதாரணமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிளிநொச்சியில்  தமிழ்  மக்கள் கூட்டணியின் மக்கள்  பணிமனை 10-03-2019 அன்று காலை 10 மணிக்கு துர்க்கை அம்மன் வீதி இல 258 ஆனந்தபுரம் கிளிநொச்சியில் கட்சியின்  செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகின்றது. இந்நிகழ்விலும் ...

Read More »

வடக்கு ஆளுநரை சந்தித்த தூதுவர்கள்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் மற்றும் நெதர்லாந்து தூதுவரான ஜோன்னே டோர்னிவேர்ட் ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களின் பொருளாதார நிலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் தொடர்பில் ஆளுநர் விளக்கமளித்ததுடன் இந்த மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் இரு நாட்டு ...

Read More »

வீட்டில் புதைத்து வைத்திருந்த துப்பாக்கிகள் மீட்பு!

500 கோடி ரூபா பெறுமதியான வைரத்துடன் கைது செய்யப்பட்ட ‘கெவுமா’ என்று அழைக்கப்படும் கெலும் இந்திக்க வழங்கிய வாக்குமூலத்திற்கமைய, இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. பேலியகொடை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. ‘வெடிகந்தே கசுன்’ என்று அழைக்கப்படுபவரின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றியதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.                               

Read More »

மாணவி மீது பாலியல் சேட்டை செய்த இருவர்  விளக்கமறியல்!

அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் பாட­சா­லைக்கு சென்று      கொண்­டி­ருந்த மாண­வி­ மீது பாலியல் சேட்டை புரிந்த இரு இளை­ஞர்களை, அக்­க­ரைப்­பற்று பொலிஸாரால் கைது                    செய்­யப்­பட்­டுள்ளார்கள். சந்­தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது          இரு­வ­ரையும் எதிர்­வரும் 19 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­பதி                  உத்­த­ர­விட்டுள்ளார். அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்­தி­லுள்ள பிர­பல        பாட­சா­லை­க்கு ...

Read More »

முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்ய தடை உத்தரவு! 

முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட கைது செய்யப்படுவதை தடுத்து உயர்நீதிமன்றம் இன்று தடை உத்தரவு வழங்கியுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவிருந்த நிலையில், கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. அதேநேரம் அவர் இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு இந்த மாதம் 11ம் திகதி குற்றப் புலனாய்வுப்பிரிவிற்கு சமூகம் கொடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ...

Read More »

இரண்டு மாத குழந்தைக்கு ஏற்பட்ட நிலை!!!

தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக, இரண்டு மாத வயதுடைய பெண் சிசுவொன்று மரணித்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி நேற்று முன்தினம் இரவு (05) இடம்பெற்ற இச்சம்பவத்தில், மாவடிவெம்பு – 2, சுந்தரம் வீதியை அண்டி வசிக்கும் துரைசிங்கம் தர்மிகா என்ற சிசுவே மரணித்துள்ளது. மேலும் சம்பவ தினம் இரவு, தாய் வழமைபோன்று தனது குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டித் தூங்க விட்ட சற்று நேரத்தில், சிசு அசைவற்றுக் காணப்பட்டுள்ளது. எனவே பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதும் சிசு ஏற்கனவே மரணித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசுவின் சடலம், உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக ...

Read More »

மன்னார் மனித புதைகுழி பரிசோதனை முடிவுகள் வெளியாகியது!!!

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனை அறிக்கை பெரும்பாலும் இன்று வெளியாகும் என்று சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக நேற்று மன்னார் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனவே இதுகுறித்து தகவல் வெளியிட்ட சட்ட மருத்துவ ...

Read More »

அம்பாறை – பன்னல்கம பகுதியில் கஞ்சா செடிகளை தீயிட்டு அழிப்பு!

அம்பாறை – பன்னல்கம பிரதேசத்திலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள வனப்பகுதி ஒன்றிலிருந்து, கஞ்சா பண்ணையொன்று கண்டுபிடிக்கப்பட்டு, தமண பொலிஸாரால் அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமண ​பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த பண்ணையிலிருந்து 3,500 கஞ்சா செடிகள் தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் போதைப் பொருள் ஒ​ழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வேதசிங்க தலைமையின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...

Read More »