செய்திகள்

தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின்  பூதவுடல்  இன்று காலை நல்லடக்கம்.

கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடிதாக்குதலில்  உயிரிழந்த தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின் பூதவுடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அன்னாரின் பூதவுடல் இன்று காலை 10.00 மணியளவில் அவரது சொந்த ஊரான சர்வோதயம் வீதி  பெரிய நீலாவணை கல்முனை என்ற முகவரியில் அவரது வீட்டில் இருந்து பொலீஸ் மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு நீலாவணை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Read More »

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் வைத்து நேற்றய தினம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த இருவருக்கும் கான்ஸ்டபிள் பதவி தரத்தில் இருந்து பொலிஸ் சார்ஜன்ட் பதவி தரத்திற்கு பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் நேற்றய ...

Read More »

பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மட்டக்களப்பு திடீர் விஜயம்.

கொழும்பில் இருந்து அவசரமாக மட்டக்களப்பிற்கு வருகை தந்த பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர  சம்பவம் நடைபெற்ற  இடத்திற்கு சென்று பாதுகாப்பு நிலைமைகளை  ஆராய்ந்தார். இச்சம்பவம் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும்  பொலிசார், விஷேட அதிரடிப்படை,  புலனாய்வு அதிகாரிகள் துரித விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் கூறினார். அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சென்ற பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்தர கொல்லப்பட்ட இரு பொலிசாரின் சடலங்களையும் பார்வையிட்டதுடன் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளையும் அழைத்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். நேற்றய தினம் வெள்ளிக்கிழமை ...

Read More »

கிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், கிராம மட்டத்தில் நடைபெற்றுவரும் கிராம சக்தி மக்கள் சங்கங்கள் எவ்வாறு செயற்பட்டு வருகின்ற, செயற்பாட்டு முன்னேற்றம், எதிர்காலத்திட்டங்கள் தொடர்பிலும் அரசாங்க அதிபரால் ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி,  உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின்  பிரதி மற்றும் ...

Read More »

துப்பாக்கி சூட்டிற்கு இரு பொலிஸார் பலி.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டிருந்த வேளை,  அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து ...

Read More »

பேருந்து விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த  சொகுசு பேருந்து நாத்தாண்டியா, ஹமில்டன் கால்வாயில் விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் மூவர் பெண்களாவர் மேலும் 20 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

840 இலட்சம் ரூபாவை மகிந்த ஹெலிகொப்டருக்காக செலவிட்டுள்ளார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக  ரவி கருணாநாயக்க எம்.பி. சபையில் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரிய பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க இதனைப்பற்றி கூறினார்.  மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலம் முடிவடையும் நிலையில், உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

Read More »

கடமைக்கு சென்றவரை காட்டுயானை தாக்கியது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் உள்ள கணேஷா வித்தியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் பழுகாமத்தை சேர்ந்த வன்னியசிங்கம் வினோதன் இன்று(29) காலை 7.00 மணியளவில் கடமைக்கு சென்றிருந்தார். பாடசாலைக்கு சென்றவரின் மோட்டார்சைக்கிளை காட்டுயானை பட்டப்பகலில் தூக்கிவீசியும், மிதித்தும் சேதப்படுத்தியுள்ளது. இதன் போது திக்கோடை 50வீட்டுத்திட்ட பகுதியில் எதிரே காட்டு யானை வந்தது யானையைக் கண்டு பயந்துபோனவர் வீதியில் மோட்டார்சைக்கிளை வைத்து தப்பியோடியுள்ளார். ஆத்திரமடைந்த காட்டுயானை மோட்டார்சைக்கிளை தூக்கிவீசி சேதப்படுத்தியுள்ளது இதனால் உரியவரின் வாகனம் சேதமடைந்துள்ளது. இதனால் மோட்டார்சைக்கிளில் பயணித்த வ.வினோதன் அதிஸ்டகரமாக காட்டுயானையிடமிருந்து ...

Read More »

ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தது இலங்கைத் தமிழரசுக் கட்சி!

ஐக்கிய தேசிய  முன்னணி ஆட்சி அமைப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி பகிரங்கமாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.   நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவராக மஹிந்த ராஜபக்ச இல்லையென்பதை சுட்டிக்காட்டி, ஒக்ரோபர் 26ம் திகதிக்கு முன்னைய நிலவரத்தை ஏற்படுத்துவதே இந்த பிரச்சனையை தீர்க்க வழியென்றும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,ஒப்ரோபர் 26ம் திகதிக்கு முந்தையை நிலமையை ஏற்படுத்தும்படியும், ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமது ஆதரவு உள்ளதென்பதையும் குறிப்பிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதின்னான்கு உறுப்பினர்களும் கையொப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.   ...

Read More »

அம்பாறையில் மாணவர்களுக்கிடையில் மோதல்.

அம்பாறை – உஹன பிரதேச பாடசாலை ஒன்றின் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் 28 மாணவர்கள் விசாரிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்ட பின்னர், நிபந்தனையின் அடிப்படையில், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென, உஹன பொலிஸார் தெரிவித்தனர். காதல் விவகாரம் சம்பந்தமாகவே மாணவக் குழுக்களுக்கிடையில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. க.பொ.த சாதாரண தர மாணவர்களே, பாடசாலையில் ஆண்டிறுதிப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பேரில், பாடசாலைக்கு விரைந்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களைப் பொலிஸ் ...

Read More »