செய்திகள்

புற்றுநோய்க்கு நம்பிக்கை அளிக்கும் புதிய சிகிச்சை

உலக மக்களை அச்சுறுத்துவதாக புற்றுநோய் இருந்தாலும், நம்பிக்கை அளிக்கும் விதமாக புதிய சிகிச்சைகளும் உருவாகி வருகின்றன. அந்த வகையில் ‘புரோட்டன் தெரபி’ என்ற சிகிச்சை பற்றி சமீப காலமாக அதிகம் பேசப்படுகிறது. இந்த ‘புரோட்டன் தெரபி’ சிகிச்சை என்பது என்ன? அணுவுக்குள் புரோட்டன், எலக்ட்ரான், நியூட்ரன் என்பன அடங்கியிருக்கின்றன என்று படித்திருப்போம். இவற்றில் புரோட்டனை அடிப்படையாக வைத்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் முறையே Proton therapy. அதாவது அணுக்களில் உள்ள புரோட்டன் என்னும் துகள்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒருவகை கதிர்வீச்சு சிகிச்சை இது. மற்ற ...

Read More »

தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் தயாராக இல்லை – எஸ். இராஜேந்திரன்

தலைநகரத் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க தனிப்பட்ட முரண்பாடுகளை முன்வைத்து திட்டமிடும் தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் தான் தயாராக இல்லை என்று மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். இராஜேந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் குழுவொன்றை ஆரம்பித்த இவர்கள், தலைநகர தமிழர் பிரதிநிதித்துவத்தை அழிக்கும் ஒரேயொரு நோக்கில் கூலிப்படையினராகவே செயற்பட்டனரென்றும் இராஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். தமிழர் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு, மலையக மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கான அபாயம் இல்லை. அங்கே பல தமிழ் எம்பீக்களை தெரிவு செய்யும் ...

Read More »

அதிவேக நெடுஞ்சாலைகளில், உள் நுழைவுகள் மற்றும் வௌியேற்றங்களுக்காக மேலதிக நடைமுறை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில், உள் நுழைவுகள் மற்றும் வௌியேற்றங்களுக்காக, மேலதிக நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, ஒரு மணித்தியாலத்தில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் உத்தேசித்துள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகளின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என்பதைக் கருத்திற்கொண்டே, இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் ...

Read More »

சுகாதார ஊழியர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனுமதி

வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக நிலவும் சுகாதார ஊழியர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனுமதி மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக நிலவும் சுகாதார ஊழியர்கள் வெற்றிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு பல தடவைஐள் கோரப்பட்ட அனுமதியே தற்போது கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் 456 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர். குறித்த நியமனத்தினால் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் பாதிப்புடன் சுட்டிக்காட்டப்பட்டு வயதெல்லை மற்றும் கல்வித் தகமைகளில் உள்ள நெருக்கடி நிலமைகள் வடக்கு மாகாண பிரதம செயலாளரின் ...

Read More »

ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தல் ஒன்றிற்கு உத்தரவிடத் தயார்!!

தற்போதைய அரசியல் சூழலில் இலங்கை ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தல் ஒன்றிற்கு உத்தரவிடத் தயாராவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடையும் நிலையில் பெரமுன ஓர் அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தி சவாலான போட்டியாகவும் ஐ.தே.கட்சியும் அதிக சலுகைகளை வழங்கி ஓர் இடத்தினைப் பிடித்து பெரும் பலத்தை திரட்ட முயல்வதனால் உடனடியாக ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தலிற்கு உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் தற்போது பெரமுனவில் ...

Read More »

பாராளுமன்றம் 15 ஆம் திகதி கலைக்கப்படுவதாக கூறப்படுவது பொய்

பாராளுமன்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி கலைக்கப்படப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பாராளுமன்றம் மீண்டும் மே மாதம் 7 ஆம் திகதியே மீண்டும் கூடுகின்றது. ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் எதிர்வரும் 2020 மார்ச் மாதம் 03 ஆம் திகதியின் பின்னர்தான் யாப்பின்படி கிடைக்கப் பெறுகின்றது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் தேவைப்படுகின்றது. ...

Read More »

கஞ்ஜிபான இம்ரானிடம் மதூஸின் சொத்துக்கள் தொடர்பில் புதிய தகவல்

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஸுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் வாகனங்களை வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனமொன்றை கஞ்ஜிபான இம்ரான் கொண்டு நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் ஆரம்பத்தில் ரிஸ்பான் என்பவர் நடாத்திச் சென்றுள்ளார். இவர் கொலை செய்யப்படவே இந்நிறுவனம் கஞ்ஜிபான இம்ரானின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிறுவனம் முழுமையாக மாகந்துரே மதூஸிற்குரியது எனவும் இம்ரானிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read More »

பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளை தாங்க முடியாமல் கவலை அடைந்த ஜனாதிபதி!!!

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  பெண்கள் போக்குவரத்துக்களின் போது  பாரியளவில் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர் என தனது  கவலையினை வெளியிட்டுள்ளார். மேற்படி ஜனாதிபதி கதுருவலயில் இடம்பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும்  அவர்தெரிவிக்கையில் இது மறைக்கப்பட வேண்டிய விடயமல்ல. இவ்வாறான சூழ்நிலையில்,பெண்பிள்ளைகளை  தமது பிள்ளைகள் எனவும் பெண்களை தமது  சகோதரிகள் எனவும் ஒவ்வொரு ஆண்களும்  எண்ணவேண்டும். இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு  பல பிரச்சினைகள் இருப்பதன் காரணமாக  அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு  பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரி  பாலசிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Read More »

26 பேருக்கும் நீடிக்கப்பட்டுள்ளது விளக்கமறியல்!!!

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 26 பேருக்கும் தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.மேற்படி இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் 26 பேரும் ஆஜர்படுத்தப்பட்டதை  தொடர்ந்து அவர்களை எதிர்வரும் 24 ஆம்திகதி  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு  மூலம் செல்வதற்கு முயன்ற போது கடந்த05  ஆம்திகதி சந்தேகநபர்கள் கைது  செய்யப்பட்டனர்.மேலும் இவர்கள் கிளிநொச்சி– கனகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில்  தங்கியிருந்த போதே சந்தேகநபர்கள் கைது  செய்யப்பட்டனர். எனினும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகவர் ஒருவருக்கு 145,000 பணம் செலுத்தி இவர்கள்  கனடாவிற்கு செல்ல முயன்றுள்ளனர்.மேலும்  இவர்களிடம் பணம் செலுத்தியதற்கான  பற்றுச்சீட்டு காணப்பட்டதுடன்  பற்றுச்சீட்டு சந்தேகநபர்களிடமிருந்து  பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கொழும்பு துறைமுக காணிகள் விற்கப்படும், தனி தேர்தல் தொகுதி உருவாக்கப்படும்

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது. நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80,000 பேருக்கு அதில் வேலை வழங்கப்படும் என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக உள்ளுராட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளை தெளிவு படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (8) கண்டியில் இடம் பெற்ற  கூட்டத்தில்  அவர் இதனைத் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது; பெலியத்தை புகையிரதப் பாதை 1991ம் ஆண்டு திருமதி ஸ்ரீமனி ...

Read More »