செய்திகள்

புத்தளம் குப்பை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேரணை

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னாத்தவில்லு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு தலைவர் சமந்த முனசிங்க தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.எம்.அனஸ்தீன் கொண்டுவந்த பிரேரணை, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது உரையாற்றிய பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், ...

Read More »

வடக்கில் மின் வாசிப்பாளர்களாக தமிழர்களை நியமியுங்கள் – சிறிதரன் வலியுறுத்து

வடக்கில் மின் வாசிப்பாளர்களாக தமிழ் பேசுபவர்களை நியமிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் தற்போது சிங்கள மொழி பேசக்கூடியவர்கள் அல்லது தமிழ் மொழி தெரியாதவர்களே மின் வாசிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ...

Read More »

மோட்டார் சைக்கிள் மோதியதில் தீ ஏற்பட்டு ஒருவர் மரணம்.மூவரின் நிலை கவலைக்கிடம்!!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வந்தாறுமுலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் மரணம் மூவர் படுகாயம். மேற்படி இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் போட்டியிட்டு வேகமாக ஓடியதான் காரணமாக இரண்டு மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் தீப் பொறி ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் மற்றும் அதில் இருந்த ஒருவர் மீது தீப் பற்றியது இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.எனவே படுகாயமடைந்த மூவரும் மட்டக்களப்பு ...

Read More »

அமெரிக்க நிதீமன்றில் கோட்டா மீது கொலை வழக்கு! இரத்தானது குடியுரிமை!!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேற்படி அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக கொலை வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகச் தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கோட்டா மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் தெரியவருகையில்,ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தமை தொடர்பில் கோட்டாபய மீது குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டால் அது நிறைவடையும் வரையில் ...

Read More »

உடன்படிக்கைகளை கிழித்து எறிந்த ராஜபக்ஸ அரசாங்கம்.அம்பலப்படுத்திய சந்திரிக்கா!!!

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டில் நிலவும் மின்சாரப் பிரச்சினை தொடர்பில் திடீர் கருத்துத் வெளியிட்டுள்ளனர். மேற்படி 2015, 2017 ஆம் ஆண்டுகளில் சம்பூரில் அமைக்கப்படவிருந்த மின் உற்பத்தி நிலையங்களை தற்போதைய அரசாங்கம் அமைக்காததன் பிரதிபலனையே இன்று எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் தமது காலத்தில் மாத்திரமே சிக்கல் இன்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். இதேவேளை, தமது காலத்தில் பல மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பித்த ...

Read More »

சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று   நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் மே தினம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

Read More »

கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் கத்தோலிக்க மக்களுக்கு ஆதரவாக அறிக்கை

கடந்த சில வாரங்களாக மன்னார் மண்ணிலே கத்தோலிக்க மதத்தைப் பற்றியும் ஆயர் குருக்களைப் பற்றியும் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற பதிவுகளையிட்டு கவலையடைவதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அந்த ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க குருக்கள், துறவிகளின் சமூகப்பணி அளப்பெரியது. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இன, மத பேதமின்றி மக்களின் நலனிற்காக பல முன்னெடுப்புக்களை மன்னார் ...

Read More »

3 மனித கொலைகளுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான்

பாதாள உலக குழு தலைவர் மகாந்துர மதூசுஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வைத்து குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மூன்று மனித கொலைகள் மற்றும் 15 பேரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவங்களுடன், விஷ போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ...

Read More »

வெள்ளவத்தையில் ரயிலுடன் மோதி வெளிநாட்டவர் உயிரிழப்பு!

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று  மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முற்பட்டவேளை, ரயில் வருவதனை அவதானிக்காத அவர் ரயிலுடன் மோதி தூக்கியெறியப்பட்டு உயிரிழந்துள்ளார். அதே இடத்தில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டிந்த ஒருவரின் தொலைபேசியில் இந்த விபத்துக் காணொளி பதிவாகியுள்ளது. இது குறித்த மேலதிக தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Read More »

நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை

நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அதிக மாத்திரை வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்றுள்ளதுடன் அவரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை இடம்பெற்றது. வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 5ஆம் திகதி நுண்கடன் நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் அளவிற்கு அதிகமான மாத்திரை வில்லைகளை உட்கொண்ட நாகராசா பரமேஸ்வரி என்ற 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அளவிற்கு ...

Read More »