செய்திகள்

யாழில் அதிகரித்து வரும் வாள் வெட்டு கும்பலின் அட்டூழியம்!!!

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி இன்று பிற்பகல்2.30 மணியளவில்  மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள  இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய்  நகருக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலும் வாள்வெட்டுக்  கும்பல் புகுந்து அங்குயிருந்தவர்களை  அச்சுறுத்தி தப்பித்துசென்று உள்ளனர்.என  மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 9 பேர் கொண்ட குழுவே  மோட்டார்சைக்கிள்களில் வாள்களுடன் வந்து  இந்தத் தாக்குதலை முன்னெடுத்தனர்  என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.அவர்கள்  அனைவரும் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள்  எனப் பொலிஸ் தெரிவித்தனர். அத்துடன் மானிப்பாய் இந்துக் கல்லூரி  ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் அண்மையில்  தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில்  இன்று இரண்டாவது தடவையாகவும் அங்கு  புகுந்து பெறுமதியான பொருள்களைத்  தாக்கி உடைத்து விட்டுக் கும்பல் தப்பித்து சென்றுள்ளது. மேலும் அந்த வீட்டிற்கு அயல் வீட்டிலும்  புகுந்து அங்கிருந்தொர்களை  அச்சுறுத்தி உள்ளனர்.அத்துடன், மானிப்பாய் கொமர்ஷியல்  வங்கிக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள்  புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும்  வகையில் தாக்குதலை நடத்தியுள்ளது.என்று பொலிஸார்  தெரிவித்தனர்.

Read More »

மின்சார விநியோகத் தடை- ATM இல், பணம் எடுப்பதில் சிக்கல்

இலங்கையில் அமுல்படுத்தப்படும் மின்சார விநியோகத் தடை காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். திடீரென மின்சார தடை ஏற்படுகின்றமையினால் ATM இயந்திரங்களில் பணம் எடுக்கச் செல்பவர்கள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது. வங்கிகள் அற்ற பகுதியில் டெலர் இயந்திரம் ஊடாக பணம் எடுப்பவர்வளே அதிகமாக பாதிப்படைந்துள்ளனர். அரசாங்க வங்கிகளுக்கு சொந்தமான ATM இயந்திரம் ஊடாக பணம் பெறுவோர் மின்சார தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் அட்டைகள் மற்றும் பற்றுச்சீட்டை வெளியே எடுத்த பின்னரும் பணம் வராமல் உள்ளமையினால் வங்கிகளுக்கு சென்று ...

Read More »

ரூபவாஹினி கூட்டுத்தாபன புதிய தலைவர் நியமனத்தில் எழுந்துள்ள சர்ச்சை

ரூபவாஹினி கூட்டுத்தாபன புதிய தலைவர் நியமனத்தில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அமைச்சரவையில் நேற்று பேசவிருந்தாராம் பிரதமர். ஆனால் அங்கு அந்த விடயம் பேசப்படாததால் அமைச்சரவை கூட்டம் முடிந்த பின் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட ரீதியில் பேச தீர்மானித்தார் ரணில். அதன்படி கூட்டம் முடிந்த பின்னர் ஜனாதிபதியின் அறைக்கு பிரதமரும் அமைச்சர் கபீர் ஹஷிமும் சென்றனர். அப்படிச் சென்றபோது அந்த அறைக்குள் ஜனாதிபதியுடன் அளவளாவிக் கொண்டிருந்தாராம் அமைச்சர் சஜித் பிரேமதாச. இதனை கண்டு அதிர்ச்சியுற்ற பிரதமர் ரணில் -அதனை காட்டிக்கொள்ளாமல் ரூபவாஹினி விடயத்தினை பற்றி பேசியதாக தகவல். ...

Read More »

கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கர்ப்பப்பைகள் அகற்றல்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கர்ப்பப்பைகள் அகற்றப்படுவதாக வெளியான தகவல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கரும்பு விவசாயத்துக்கு பெயர்போனது. பெரும்பாலான மக்கள் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது இங்குள்ள கரும்புத் தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டிருப்பதும், அதற்கான காரணமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாதவிடாய் சமயங்களில் பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பெண்களால் கடின உழைப்பில் ஈடுபட முடியாது. அந்தச் சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு ...

Read More »

யாழில் மண்ணெண்ணெயை அருந்திய வெளிநாட்டு சிறுவன்

யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவ தினமான நேற்று  வீட்டில் இருந்தபோது தாகமாக இருக்கின்றதென குளிர்பான போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை குளிர்பானம் என கருதி குடித்துள்ளார். இதனையடுத்து சிறுவனை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிறுவன் மாற்றப்பட்டுள்ளாரென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

காலின் மேலால் ஏறிச்சென்றது ரிப்பர் வாகனம் 

வீதியில் படுத்துக்கிடந்தவரின் காலின் மேலால் ஏறிச்சென்றது ரிப்பர் வாகனம் மாங்குளம் பனிக்கன் குளத்தில் சம்பவம். வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ரிப்பர் ரக வாகனம் ஏ ஒன்பது சாலையில் பனிக்கன்குளம் எனும் பகுதியில் படுத்திருந்தவரின் காலின் மேலால் ஏறியதில் இரண்டுகால்களும் சிதைவடைந்த நிலையில குறித்தநபர் முதலுதவியின் பின்னர் அவசரப்பிரிவு அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி கொண்டுசெல்லப்படுகின்றார். 35-40 வயது மதிக்கத்தக்க நபராகவிருந்தபோதிலும் யார் என்று அடையளம் காணப்படவில்லை மதுபோதையில் வீதியினருகே படுத்திருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

Read More »

லலித் குமாரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பாதாள உலக குழு உறுப்பினர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் லலித் குமாரவை தொடர்ந்தும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. களுத்துறை – எத்தனமடல பகுதியில் சிறைச்சாலைகள் பேரூந்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு சமயங் உள்ளிட்ட 07 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தகவல் வழங்கியதாக சந்தேகத்துக்குரியவரான லலித் குமாரவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு ...

Read More »

நாடு கடத்தப்பட்ட முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

பாதாள உலகக் குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட, முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசரை எதிர்வரும் 24 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More »

நான்காம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம்

புதிய அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம்  9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த இரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்

இன்று  நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தென் மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் தென்மாகாண சபை ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கையெழுத்திட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆ உறுப்புரிமைக்கு அமைய 08வது பந்தியின்படி இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்மாகாண சபையின் பதவிக் காலம் நேற்று நள்ளிரவு நிறைவடைந்துள்ளது.

Read More »