செய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.-ஹிஸ்புல்லாஹ்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பன்னிரெண்டு வைத்தியர்களை நியமிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மேற்படி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்து தரப்படும்-ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மேலும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்று மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

Read More »

கொழும்பிலிருந்து யாழுக்கு துரித ரயில் சேவை ஆரம்பம்!!!

கொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். மேலும் 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேரத்தை மீதப்படுத்தவே பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில் புதிய ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் ரயில் வீதி ஒன்று அமைத்து சிறந்த போக்குவரத்து சேவை ஒன்றை வழங்குவதற்கு ...

Read More »

சிறந்த கல்வி திட்டத்தை உருவாக்குவது அவசியம்!-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஸ்ரீலங்காவில் மூன்று இலட்சம் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான தேவை காணப்படும் நிலையில் ஒரு இலட்சம் பேர் மாத்திரமே உள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவர்களை உருவாக்குவதற்கான நவீன கல்வி முறைமைகள் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பழமையான கல்வி முறைமையில் இருந்து விடுபட்டு, நவீன யுகத்திற்கு ஏற்றவகையில் கல்வி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கொழும்பை அண்மித்த, களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். மேற்படி ...

Read More »

முதலைக்குடா மாணவர்கள்  தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சேர்ந்து ஆர்ப்பாட்டம்!

மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்களும் மற்றும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தை இன்று காலை பாடசாலையின் வாயிற்கதவை மூடி பதாகைகளை ஏந்தியவாறு மேற்கொள்ளவுள்ளனர். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டி தற்போது கடந்த ஓரிரு தினங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் ஒருகட்ட விளையாட்டுப்போட்டி அருகிலுள்ள முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. அதேவேளை, மைதானத்திற்குள் திடீரென புகுந்த சிலர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதலை ...

Read More »

காணாமல் போனோருக்கு மரணச் சான்றித​ழ் வழங்கப்படவில்லை!

காணாமல் போனவர்கள் சார்பாக, எந்தவொரு மரணச் சான்றிதழும் வழங்கவில்லையென, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது நசீர், கேள்விகளை கேட்டுள்ளார். காணாமல் போனவர்கள் சார்பான பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மரணச் சான்றிழ்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்தின் பிரகாரம் தனித்தனியாக எத்தனை என்பதை, அமைச்சரால் சொல்ல முடியுமா? எனவும் ...

Read More »

மங்கள சமரவீர அமைச்சு பதவியை பறித்த ரணில்!

ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தனது அமைச்சு பதவியை சற்று முன்னர் ராஜினாமா செய்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவித்துள்ளது. புதிய ஊடக அமைச்சராக ருவன் விஜயவர்தன ஜனாதிபதி முன்னிலையில் சற்று நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்வுள்ளதாகவும், அதேவேளை, நிதியமைச்சராக மங்கள சமரவீர தொடர்ந்தும் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகொழுக்கு அமைய மங்கள சமரவீர, ஊடக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவன் விஜேவர்தன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வருகின்றார் எனவும், ருவன் பிரதமர் ரணில் விக்ரமசிங்வின் ...

Read More »

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது!

விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என கூறியபடியால், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக  வழக்கு தொடரப்பட்டு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன வழக்கை மே மாதம் 10 ஆம் திகதிக்கு இன்று ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தாரென குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...

Read More »

7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஏஷ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஏஷ் போதைப் பொருள்களுடன் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் தொடர்ந்து, சந்தேக நபரிடம் இருந்து 8.670 கிலோ கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நாட்டில் பரவியுள்ள போதைப் பொருளை ஒழிக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, அண்மை காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி தேடுதல் ...

Read More »

வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு அவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் தென் மாகாண உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமல் போன தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 26 வயதான விராஜ் மதுஷங்க எனும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா கைது செய்யப்பட்டடு,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். என்பது ...

Read More »

வவுனியாவில் சட்டவிரோத செயற்பாடு!!!

வவுனியா போகஸ்வௌ குளத்தில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த ஜந்துபேர் வவுனியா மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் இன்றய தினம் கைதுசெய்யபட்டனர். மேலும் இது தொடர்பாக தெரியவருகையில்,வவுனியா போகஸ்வௌ குளத்தில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி நிசாந்தன் யோகநாதன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் மடுகந்தை விசேட அதிரடிப்படையினர் சகிதம் இன்று காலை குறித்த பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். ...

Read More »