செய்திகள்

ஐந்தாவது முறையாகவும் இஸ்ரேலிய பிரதமராக பெஞ்சமின்

இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இடம்பெற்ற இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாகவும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

தனியார் துறையிடம் மின் கொள்வனவு: பிரதமர் தலைமையில் விசேட குழு

தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை நேற்று  அங்கீகாரம் வழங்கிய நிலையிலேயே இந்தக்குழு அமைக்கப்படவுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்துள்ள மின்கொள்வனவு யோசனையின்படி பல்லேகல உப மின்னுற்பத்தி நிலையத்திற்கு 24 மெகாவோட்ஸ் மின்சாரமும், காலி உப மின்னுற்பத்தி நிலையத்திற்கு 10 மெகாவோட்ஸ் மின்சாரமும் அக்ரிகோ இன்டர்நெஷனல் புரொஜெக்ட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது. இந்நிறுவனத்தில் ஒரு கிலோவோட்ஸ் மின்சாரம் 30.20 ...

Read More »

தண்டப்பண நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு!!!

இலங்கை  அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுள்ள புதிய தண்டப்பணங்களுக்கு எதிர்ப்புத்  தெரிவித்து இலங்கை தனியார் பஸ் சங்கத்தினர் நேற்று  நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள  பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். மேலும் தனியார் பஸ் ஊழியர்கள்  சிலரே பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். எனினும் நாட்டின் பல பகுதிகளில் அதாவது காலி மற்றும் கண்டி தனியார் பஸ் சேவை  வழமை போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் அகில இலங்கை தனியார் பஸ்  உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு  விஜயவர்தன தெரிவிக்கையில் பஸ்  பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் எந்தவித  அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை என  தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் பண்டிகைக் காலத்தில்  பயணிக்கும் மக்களுக்கு அசௌகரியம்  ஏற்படுத்தும் வகையில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் இதேவேளை, தமது சங்கத்தினர் இந்த  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லை என அகில  இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சனபிரியஞ்சித்  தெரிவித்துள்ளார்.

Read More »

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் – ஜனாதிபதியின் நெகிழ்வு

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி, தனது குழந்தைகளின் போசணை மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தியாக்க உதவியளிக்குமாறு “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” நிகழ்ச்சித்திட்டத்தில் விடுத்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் குழந்தைகளின் பராமரிப்பிற்காக தலா ஐந்து இலட்ச ரூபா வீதம் நான்கு குழந்தைகளுக்கும் 20 இலட்ச ரூபா நிதியுதவியினை இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

Read More »

தந்தையொருவரால் குறடால் தாக்கப்பட்ட குழந்தை பலி..!

மட்டு கொக்கட்டிச்சோலையில் ஓன்றரை வயது குழந்தையொன்று , குறடால் தந்தையின் தாக்குதலிற்குட்பட்ட நிலையில்,  உயிரிழந்துள்ளமையானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், நபரொருவர், கையில் வைத்திருந்த குறடால்   மனைவி மீது தாக்க முற்பட்டபோது,  அது தவறி மனைவியின் கையில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது பட்டதில், குழந்தை படுகாயமடைந்த நிலையில்,  மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (08.04.2019) குறித்தக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்துள்ளது.  இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையை, கைது செய்துள்ளதாக  ...

Read More »

குதிரைசவாரி செய்து பரீட்ச்சை ஹாலுக்கு சென்ற மாணவி

கேரளாவில் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புல்லட்டில் பறப்பது போல் குதிரைசவாரி செய்து பரீட்ச்சை ஹாலுக்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் உலக லெவல் ஹிட் அடித்துள்ளது. கேரளாவில் திரிசூர் அருகே, 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், தேர்வுக்கு நேரமாகிவிட்டதால், குதிரை வேகத்தில் சென்றாலொழிய தேர்வுக்கு நேரத்திற்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்து, குதிரையிலேயே தேர்வு ஹாலுக்குச் சென்றுள்ள சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது. எந்த பிசிறும் இல்லாமல் பக்காவான ஹார்ஸ் ரைடிங் கற்றுத் தேர்ந்த ஒருவராலேயே சரிவேகத்தில் முறையான ஸ்பீடில் சவுகரியமான ஒரு ஹார்ஸ் ...

Read More »

24 வயது யுவதியை 67 வயது தாத்தா திருமணம் செய்தார்

இந்தியாவில் 24 வயது இளம் பெண்ணை 67 வயது முதியவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்தவர் 67 வயதான ஷம்சீர் சிங் என்பவருக்கும் 24 வயதான நவ்பிரீத் கவுர்  என்ற அழகிய இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. வயது வித்தியாசம் மிக அதிகமாக உள்ள குறித்த தம்பதியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் குடும்பத்தினரால் தங்களது உயிருக்கு ஆபத்து என நீதிமன்றத்தை ஷம்சீரும், நவ்பிரீத்தும் நாடியுள்ளனர். அதாவது தங்களது உறவுமுறையை ...

Read More »

கைக்குண்டுடன் விளையாடிய சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்.புத்துார் பகுதியில் கைக்குண்டை எடுத்து விளையாடியபோது குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் புத்துார் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளான். இதன்போது பயன்பாடற்ற காணி ஒன்றிற்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்துள்ளான். அந்த கைகுண்டை வீதியில் எறிந்து விளையாடிய நிலையில் குண்டு வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான். இந்த சம்பவம் ...

Read More »

யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் ஒப்பமிட்டு, கடந்த மார்ச் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி விசேட அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலின் ...

Read More »

ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படவிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்தே, மேற்கொள்ளப்படவிருந்த ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவிருந்தது. பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தாலும், இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படடே குறித்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »