செய்திகள்

புதியதோர் பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த சிலர் விசேட அதிரடிப்படையால் கைது!!!

சிறிலங்காவின் மற்றுமொரு பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த சிலர் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேற்படி பாதாள உலக கும்பலின் முக்கிய புள்ளியென சொல்லப்படும் ஷானுக்க மதுஷான் (ஒழு மரா) உட்பட அவரது பதினோரு சகாக்கள் வென்னப்புவவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இதேவேளை மற்றொரு பாதாள உலகக் கும்பல் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடிக் கைதுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More »

கல்முனை வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற்றப்படும்!!!

கல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோள் நிறைவேற்றித்தரப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேற்படி கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் நிகழ்விற்கு விஷேட அதிதியாக வருகைதந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,கல்முனை பிரதேசத்தில் பிரதேசவாழ் மக்கள் மிகவும் வேண்டிநிற்கின்ற, கடந்தகாலங்களில் செயற்பட்டிருக்கவேண்டிய, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. எனவே அந்தவிடையத்தில் ஒட்டுமொத்தமாக. கல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோளாக இருப்பது ...

Read More »

நூறு கோடி நஷ்ட ஈடு கேட்கும் அமைச்சர் ரிஷாத்பதியுதீன்.

மக்கள் மீது தனக்குள்ள செல்வாக்கு ,கீர்த்தி என்பவற்றை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்த,தொழில்சார் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளர் லசந்த விக்கிரம சிங்கவிடமிருந்து ரூபா நூறு கோடி மான நஷ்ட ஈடாக வழங்குமாறு தனது சட்டத்தரணியூடாக அமைச்சர் ரிஷாத்பதியுதீன் கோரியுள்ளார். மேற்படி வியட்நாமிலிருந்து மிளகை இறக்குமதி செய்து,வேறு வகையில் பொதியிட்டு அவற்றை இந்தியா உட்பட வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளுர் உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில் அமைச்சரும், அவரது சகோதரரும் நடந்து கொள்வதாக லசந்தவிக்கிரமசிங்க வெளியிட்ட ...

Read More »

அனுமதி இன்றி சாராயம் விற்பனை செய்த நபருக்கு தண்டம்!!!

உரிய அதிகாரியின் அனுமதிப் பத்திரமின்றி 180 மில்லி லீற்றர் அரச சாராயத்தை விற்பனை செய்த யாழ்ப்பாணம் மீசாலை தெற்கைச் சேர்ந்த நபருக்கு, சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. மேலும் சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.வழக்கு விசாரணையில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

Read More »

பசில் மற்றும் வீரவங்ச இடையில் பாரதூரமான மோதல்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் பாரதூரமான மோதல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, விமல் வீரவங்ச தரப்பு பொதுஜன பெரமுனவுக்குள் வாய்ப்பை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், வீரவங்ச கலந்துக்கொள்ளும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் கூட பசில் ராஜபக்ச கலந்துகொள்வதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், இணக்கப்பாடு ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என பசில் ராஜபக்ச ...

Read More »

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடுகள், செல்வோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு 10 பில்லியன் ரூபா கடன் உதவி பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சொந்தமான வீடுகளை நிர்மாணித்து கொள்வதற்கும், தனது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும், தேவை பூர்த்தி செய்வதற்கும், இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடிச் செல்வது அதிகரித்துள்ளது. அதேவேளை, எதிர்பார்ப்புக்களை போன்று தேவைகள் நிறைவு செய்யப்படுவதில்லை, எனவே அவர்களின் எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள தனியாக கடன் ...

Read More »

நாங்கள் கால அவகாசம் கொடுப்போம்.ஆனால் தமிழ்மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.-சி வி விக்னேஸ்வரன்

கால அவகாசம் என்பது அரசாங்கத்திற்கு ஒரு நன்மையினை பெற்றுக்கொடுப்பதாக அமையும், தமிழ்மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேற்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட 130 மாணவர்களுக்கு மாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் புலம்பெயர் தமிழ் மக்களது நிதி பங்களிப்பில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் ...

Read More »

விடுதலை புலிகளை ஒழிப்பதற்கு பாரிய பங்காற்றியது இந்தியாவே!!!-மஹிந்த ராஜபக்ச.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது என மஹிந்த ராஜபக்ச இந்தியாவில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.மேற்படி 2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் பெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.”இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை பொறுத்தவரை சிறப்பான காலங்களும் காணப்பட்டுள்ளன மோசமான காலங்களும் காணப்பட்டுள்ளன.ஆனால் இரு நாடுகளையும் பாதிக்கும் போக்குகள் குறித்து புரிந்துகொள்வதும் எங்கள் பரஸ்பர நன்மைகளிற்காக ...

Read More »

ஒத்துழைப்பு வழங்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!!

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதேவேளை, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் அமைப்பதானால் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

தமிழ் மொழியை நெஞ்சில் பதித்து போராடிய தமிழீழ விடுதலை புலிகள்…

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அதே தமிழர்கள் எழுச்சியடைந்தர்களோ அந்த மொழியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் மூர்க்கத்தனமான ஓர்மத்தினைக் கொண்டிருந்தார்கள். மேலும் போர்க்களமும் பங்கர் வாழ்க்கையும் மட்டும் தமது குறிக்கோளை எட்டிவிடுவதற்கு துணை நிற்கப்போவதில்லை என்பதை விடுதலைப் புலிகள் நன்குணர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் அவற்றிற்கும் மேலாக நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களோடு மொழிக்காப்பு நடவடிக்கையிலும் சமபங்கு அளவுக்கு இறங்கினார்கள். மேலும் ...

Read More »