செய்திகள்

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கவே தீவிர முயற்சி.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை களமிறக்க கட்சியின் உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைமைத்துவம் செயற்பட்டு வருகிறது என அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பொன்சேகாவும் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியுமெனின் கட்சியின் பிரதித் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாதா?” என கேள்வி எழுப்பியுள்ள அவர், “சஜித் பிரேமதாஸ களமிறங்கினால்  வெற்றிப் பெறுவார் என்பதை நாம் நிருபிப்போம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.    ...

Read More »

இரா­ஜி­னாமா செய்யுங்கள் – ஜனாதிபதி.

இன்­றைய தினத்­துக்குள் நாட்டின் அனைத்து மாகாண சபை­    ஆளு­நர்­க­ளையும் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஜனா­தி­பதி        மைத்­தி­ரி­பால சிறி­சேன.    ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளளார். ஏற்­க­னவே கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய, வடக்கு, வடமேல்,    மத்­திய மாகாண சபைகள் கலைந்­துள்­ளது. இன்னும் ஊவா மேல் மற்றும் தென் மாகாணங்கள் கலைக்கப்படவுள்ளது. இந்த நிலை­யி­லேயே அனைத்து மாகாண சபை­ ஆளு­நர்­களையும் நேற்று 31 ஆம் திக­திக்குள்      இரா­ஜி­னாமா செய்­யு­மாறு    ஜனா­தி­பதி குறிப்பிட்­டுள்­ளார்.       

Read More »

கிணற்றுக்குள் இறங்கிய அமைச்சர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென ஏற்பபட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த கிணறுகள் பல்வேறு அமைப்புகளால் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்வாதார அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பாலித தேவப்பெரும குழுவினர் கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண மீட்பு குழு போன்று அமைச்சர் என்ற பெருமையை மறந்து கிணற்றில் இறங்கி சுத்தம் செய்து கிணற்று நீரை இறைத்து கொடுத்துள்ளார்.    ...

Read More »

 மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் த.வரதராஜன் அவர்களின் தலைமையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.சத்தியகௌரி, பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், சமூகசேவை உத்தியோகத்தர் ஆர்.கிருபராசா, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சு.லில்லிமலர், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் உட்பட அனைவரும் கலந்துகொண்டுள்ளார்கள். இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றது அவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.         

Read More »

பஸ் விபத்து ; ஒருவர் பலி ;

கடான – 7ஆம் மைல் கல் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார், மற்றும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த பஸ் கதிர்காமத்திற்குச் சென்றுகொண்டிருக்கும் போது வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். விபத்தில் உயிரிழந்த நபர்  கடான – ஹரிஸ்சந்திரபுர,              பி​ரதேசத்தைச் சேர்ந்த​, 62 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கமே விபத்து ஏற்பட்டுள்ளதற்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.    ...

Read More »

புதிய கருவிகள் பொருத்தும் நடவடிக்கைகள்.

நகரங்களை அண்டியப் பகுதிகளில் வளி மாசடைதலை அளவிடும் கருவிகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைக​ளை, மத்திய சுற்றாடல் அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது. இதன்படி கொழும்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில், வளி மாசடைவதை தடுக்கும் வகையில், இக்கருவிகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர், கே.எச். முத்துகுட ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் ​முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.               

Read More »

ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்!

புதிய அமைச்சரவை தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஏமாற்றம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவிக்கையில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எவ்வித ஏமாற்றங்களும் ஏற்படவில்லையென  தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயற்படுகின்றனர் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.               

Read More »

நஞ்சருந்தி மனைவி உயிரிழப்பு!

திருகோணமலை கந்தளாய் பகுதியில்  இளம் பெண்ணொருவர் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். கந்தளாய், ரஜ எல பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரே நேற்று இவ்வாறு  நஞ்சருந்தி  உயிரிழந்துள்ளார், என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 24 வயதுடைய சங்கரணி சன்சத  உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பைப் பேணியதால், அதனை விட்டு விடும் படி மனைவி கூறிய போது கணவர் அதனை ஏற்காத நிலையிலே மனைவி மன விரக்தியில்  நஞ்சருந்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அரையில் ...

Read More »

கிளிநொச்சியில் 12 வயது சிறுவன் வாய்க்காலில் விழுந்து மரணம்.

கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஒருவர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. மேற்மடி கிளிநாச்சி சம்பவத்தில் ஆனந்தபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்வவினோதரன் அன்புரதன் என்ற சிறுனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.குறித்த சிறுவன் அவரது அம்மம்வாவின் வீட்டுக்கு சென்று அங்கு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன் போது அப்பகுதியில் வெள்ளத்தினால் நிறைந்திருந்த வாய்க்கால் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

தொழிலாளர் குடியிருப்பு 24 வீடுகள் தீக்கிரை;

அட்டன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில், நேற்றுக்காலை 6.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகிவிட்டது. அத்துடன்,  தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்துள்ளது, இந்த வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து, அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அட்டன் பொலிஸார், அட்டன் – டிக்கோயா நகர சபை தீயணைப்பு படையினர், ...

Read More »