தமிழ்லீடர்

மழையுடன் கூடிய வானிலை தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் அனைத்து இடங்களிளும் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் நிலையுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேவேளை இன்று மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் (mm) மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் யாழ் மாவட்டத்தில் கஜ புயலின் தாக்கத்தினால் 2,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பட்டுள்ளது. நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுகையில் காற்று மற்றும் கடுமையான மழையின் காரணமாக 16 வீடுகள் முழுமையாகவும் 483 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார். பாதிக்கப்பட்டவர்கள் ...

Read More »

ஏறாவூரில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது.

மட்டக்களப்பு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் பகுதியில் போதைப்பொருட்களுடன் ஏறாவூரை சேர்ந்த ஒருவர் ஏறாவூர் மக்கள் வங்கி வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினரால் நேற்று மதிய வேலை அந்த நபரை போதைப்பொருளுடன் வீதியில் வைத்து தங்களுக்கு கிடைக்கபெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.  

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் கைகளப்பு ஏற்பட்டதாகவும் அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது அதில் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இவ்வாறு மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன, இந்த தாக்குதல் அரச தரப்பினரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையின் வரலாற்றில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் மோதல்.

நாடாளுமன்றத்திற்குள் ஒரு சில அமைச்சர்கள் கூரிய ஆயுதங்களை கொண்டு சென்றமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் நேற்று (வியாழக்கிழமை) கூடியபோது, பெரும் குழப்பநிலை உருவாகி அமைச்சர்கள் இடையில் பெறும் மோதலை உருவாக்கியது. குறித்த மோதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த நாடாளுமன்ற பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டனர் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கையில் ...

Read More »

14 வயது சிறுமியை பாலியல் உறவிற்கு உட்படுத்திய இளைஞர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் தந்தை வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்று சென்றுள்ள நிலையில் சிறுமி தரம் 10 ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக பாடசாலை செல்லாது வீட்டில் இருந்து வந்துள்ளார். அத்துடன் சிறுமிக்கு குறித்த இளைஞன் கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அவருடன் உரையாடி வந்துள்ளதுடன் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. ...

Read More »

கஜா புயல் தாக்கும் அபாயம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறலாம் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது. இந்நிலையில், கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிளும், இதன்படி யாழ் குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 100கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் மன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் ...

Read More »

நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைப்பு.

இன்று காலை 10 மணிக்கு கூட்டப்பட்ட நாடாளுமன்ற நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். அமர்வுகளின் போது, மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சபாநாயகர் வாக்கெடுப்பு கோரியமைக்கு அமைய சபையில் கடும் எதிர்ப்புகள் நிலவியதால் சபை நடவடிக்கைகள் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More »

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று சற்று முன்னர் கூடியது .

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று சற்று முன்னர் கூடியது கட்சித்தலைவர்களுக்கிடையிலான முக்கிய கூட்டம் ஒன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதியினால் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடையுத்தரவை அடுத்து, நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. இந்தநிலையிலேயே தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் கட்சித்தலைவர்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பான கூட்டமாக அமையப்பெற்றிறுக்கின்றது.

Read More »

பெரும்பான்மை இழந்தது மகிந்த அரசாங்கம் !

ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது. பராளுமன்றத்தில் நிலவிய அமைதியின்மை காரணமாக பாராளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர் அறிவித்த சபாநய அறிவித்துள்ளார். இந்நிலையில், நாளை கூடும் ...

Read More »

நாடாளுமன்றக் கலைப்புக்கு இடைக்காலத் தடை !

நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. வரும் டிசம்பர் 07ம் திகதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பிற்கு இணங்க, பொதுத்தேர்தலிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் நளின் ஜயலத் பெரேரா, பிரசன்ன ஜெயவர்த்தன, பிரியந்த ஜயவர்த்தன ஆகிய மூன்று நீதிபதிகளை கொண்ட ஆயம் சற்று முன்னர் இந்த உத்தரவை விதித்தது. டிசம்பர் மாதம் 5,6,7ம் திகதிகளில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 09ம் திகதி ...

Read More »