தமிழ்லீடர்

கோத்தபாயவிற்கு நீதிமன்ற உத்தரவு!!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேற்படி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. எனவே இதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டு பணயங்களை மேற்கொள்ள முடியும்.

Read More »

கடலினுள் உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்ட நகரம்!!!

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சீனாவால் உருவாக்கப்பட்டுவரும் துறைமுக நகரம் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்படி கொழும்பின் கடலினுள் தனியாக தீவு ஒன்று அமைத்து அதில் பல வசதிகளையும் கொண்ட நகரம் ஒன்றை சீனா அமைத்துவருவது தெரிந்த விடயமே.எனினும் சீனா சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள் என்பன இந்த இடத்தில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் பிராந்திய ரீதியாக இந்தியாவுக்கு அது அச்சுறுத்தலாகவே அமையப்போகின்றது என்பது படைத்துறை ஆய்வாளர்களின் கருத்தாக விளங்குகின்றது. எனவே இந்த துறைமுக நகர் நிர்மாணிப்பின் ...

Read More »

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்!!!இருவர் படுகாயம்!!!

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனனர்.மேற்படி நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓமந்தை சேமமடு பகுதியில் வயல் காவலுக்காக இருந்த இருவர் மீது அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். எனினும் இதனையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், படுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் இந்த தாக்குதல் காரணமாக வசந்தகுமார் வயது – 37, ...

Read More »

பாடசாலை அதிபர் மாணவிக்கு செய்த கொடூரமான செயல்!

அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை பிரதி அதிபரை கைது செய்துள்ளனர், சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி கைது செய்யப்பட்ட அதிபர் அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவரென குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவியின் தந்தைக்கும் பிரதி அதிபரிரும் இடையில் உள்ள நட்பிற்கமைய கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் குறித்த பாடசாலைக்கு, இந்த மாணவி இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பின்னர், அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் பிரதி அதிபருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் மாணவி ...

Read More »

நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்திய ஒருவர் அன்றைய தினமே செய்த செயல்!!!

மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்துக்காக நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்திவிட்டு வந்த அன்றைய தினமே மீளவும் மாவா போதைப்பொருளை விற்பனைக்காக தயார்ப்படுத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு சந்தேகநபர் சுமார் 16 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் பொதிகளுடன் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும் “யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாரட்னவின் கீழான சிறப்புப் பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.சந்தேகநபர் தனது உடமையில் மாவா ...

Read More »

ஆசிரியரின் கொடூரமான தண்டனையால் 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு!!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழுள்ள பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி நேற்று (13) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மீதே குறித்த வகுப்பாசிரியர் இவ்வாறு மிக கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.கையினாலும் தடியினாலும் மிகவும் கடுமையாக தம்மை தாக்கியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் இதனால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார ...

Read More »

யாழ் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் நீர்தேக்கம்!!!

யாழ்ப்பாண மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கீழ் பாலியாறு நீர்த்தேக்கத்தை நீர்மாணிக்கப் போவதாக தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, ஆற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள்.எனவே இந்த நிலக்கீழ் நீர் எதிர்வரும் 10 முதல் 20 வருட காலத்திற்கு மாத்திரமே போதுமானதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக ...

Read More »

கொழும்பு-பிலியந்தலவில் இனந்தெரியாதவர்களால் துப்பாக்கி சூடு!!!

இலங்கையின் மேற்கே கொழும்பு பிலியந்தல, மொரட்டுமுல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. மேற்படி இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு நபர்கள் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸ் தரப்பு கூறுகின்றது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.  மேலும் இதன்போது அவ்விடத்தில் நின்ற மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட விரோதம் காரணமாக குடும்பம் ஒன்றின்மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார். எனவே ...

Read More »

அதிக வெப்பத்தால் மயங்கி வீழ்ந்தவர் மரணம்!

யாழில் தற்போது அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ள நிலையில், இவர் யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.                             

Read More »

மகிந்த அமைக்கும் பலமான கூட்டணி!

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து அமைக்கவுள்ள பலமான கூட்டணி தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமசரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , ஜகத் வெல்லவத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும், சுதந்திர கட்சி சார்பில் பேராசிரியர் றோஹண லக்ஷ்மன் பியதாச, சுதந்திர கட்சியின் பொதுச் ...

Read More »