தமிழ்லீடர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு அமைய புதிய அமைச்சர்.

கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று  வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று  சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார். புதிய அமைச்சரவை நியமனத்தின் போது நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு அமைய இன்று அமைச்சரவையில் அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பொறுப்பொன்று கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Read More »

வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரி கையொப்பம் இட்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை பிரதமாரக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். இதனால் கொழும்பு அரசியல் பெரும் குழப்பமடைந்தது. பிரதமர் பதவிக்கு ரணில் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உரிமை கோரி வந்த நிலையில், நாடாளுமன்றமும் ஒத்தி ...

Read More »

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாணசபை தேர்தல்.

நேற்று அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் நாடாளவிய ரீதியில் ஐந்து இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இடம்பெற்ற அதில் கலந்துகொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர. விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்திய நாம் பயிர் செய்து நாம் உண்போம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் பலாமரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இது முன்னெடுக்கப்படுகிறது என்றார். இங்கு தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில், எதிர்வரும் சில மாதங்களில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று, அரசியலமைப்புக்கு ...

Read More »

சைக்கிள்-வீணை கூட்டு! விக்கியைப் பயன்படுத்த முயலும் கஜேந்திரகுமார்!

ஈ.பி.டி.பியின் ஆதரவை எதிர்பார்த்தே தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாநகரசபை முதல்வர் பதவிக்கு போட்டியிட்டதென கூறியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். முதலமைச்சரை பயன்படுத்து, எதிர்கால தலைமை தங்களிடம் மட்டுமே வர வேண்டுமென முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். வாரஇதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணலொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளாார். முதலமைச்சரின் அணியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இணையக்கூடாதென முன்னணி கூறி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது- “முதலமைச்சர் ஆரம்பிக்கக் கூடிய கூட்டு முன்னணியில் நாங்கள் வரலாம், சித்தார்த்தன் போன்றவர்கள் வரலாம். அல்லது முதலமைச்சர் சொன்னது ...

Read More »

”தமிழ்த் தேசியத்தின் காவலனே வருக” – கிளி.யில் விக்கிக்கு ஆதரவு

கிளிநொச்சி மாவட்டம் எங்கும் தமிழ் மக்கள் கூட்டணி கட்சித் தலைவர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிராக செயற்பட்டு தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுறுதியுடன் பயணித்ததற்காக கூட்டமைப்பின் தலைமையால் பல நெருக்கடிகளை அனுபவித்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார்.   இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டம் எங்கும் முன்னாள் முதலமைச்சரின் கட்சியை வரவேற்றுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  “தமிழ்த் தேசியத்தின் காவலனே! வருக! வருக!  ...

Read More »

கஜேந்திரனின் சகோதரர் விடுதலையானது எப்படி? – இரகசியம் சொல்லும் சுரேஸ்

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளிநாட்டிலிருந்து யார் மூலம் இலங்கை திரும்பி வந்தாரென்பதும், அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு யாருடைய உதவியுடன் அவர் உயிருடன் திரும்பி வந்தாரென்பதும், எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதும், இன்னும் பல விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.“ இவ்வாறு அதிர்ச்சி தகவலை அம்பலப்படுத்தியுள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஆயுதப் போராட்ட காலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த கஜேந்திரகுமாரோ, பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தில் மாத்திரம் அங்கம் வகித்த கஜேந்திரனோ, தங்களை மட்டும் தேசிய ...

Read More »

எஸ். வியாழேந்திரனுக்கு எதிராக த.தே.கூ எடுக்கவுள்ள நடவடிக்கை.

எஸ் வியாழேந்திரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  கருத்து தெரிவிக்கையில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளட் அமைப்பின் உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை மாலை அரசாங்கத்தில் இணைந்துகொண்டு பிரதி அமைச்சராக பதவியேற்றார். அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Read More »

மகிந்த அமைச்சரவையில் இணைகிறேனா? – சிவசக்தி ஆனந்தன் மறுப்பு

ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மகிந்த அமைச்சரவையில் இணையப் போவதாக  பகிரங்கமாகத்  தெரிவித்தார் என ஐபிசி தமிழ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மை இல்லை என்று சிவசக்தி ஆனந்தன் அவர்கள் சற்றுமுன் தமிழ்த் தேசிய வானொலிக்குத் தெரிவித்தார்.   இச் செய்தி தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் அவர்கள், ஐபிசி தமிழ் ஊடகத்தின் இச் செயலானது ஊடக அறத்துக்கு முரணானது என்றும் இது தொடர்பாக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.   இச் செய்தி தொடர்பான விரிவான அறிக்கை ...

Read More »

விலைபோனார் வியாழேந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் மைத்திரி மகிந்த பக்கம் தாவி  அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்றுக்கொண்டார்.   தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்றுக் காலை பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.   கனடாவிலிருந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நேரடியாக மஹிந்த ராஜபக்ச அணியை சந்தித்துள்ளார், மட்டக்களப்பை சேர்ந்த பாதிரியார் ஒருவரின் ஏற்பாட்டில், வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.   மகிந்த ராஜபக்ச உடனான ...

Read More »

கட்சி நலனைப் புறந்தள்ளி கொள்கைக்காக ஒன்றுபடவேண்டும் – விக்கி

“கொள்கை ரீதியாக நாம் பயணிக்க விரும்பினால் எம் கட்சிகளின் நலவுரித்து பின் ஆசனத்திற்குப் போக வேண்டி வரும். கட்சி நலன்களையும் எமது முன்னைய பின்னணிகளையும் மற்றையவர்களின் முன்னைய பின்னணிகளையும் கணக்கில் எடுத்து பயணிக்கத் தொடங்கினோமானால் எமது ஒற்றுமை குலைந்து விடும். ஒரே கொள்கைகள் உடைய சில கட்சிகள் தமது கட்சி நலன்கள் சார்ந்து வேற்றுமைப்படப் பார்க்கின்றன. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. கட்சிகள் தமது கொள்கைகளில் திடமாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் என்று வந்தவுடன் ஒரே கொள்கைகளில் இருக்கும் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளில் ...

Read More »