தமிழ்லீடர்

கடற்படை அதிகாரிகளால் கடலட்டைகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில், கடலட்டைகளை பிடித்து அவற்றை ஜீப் வண்டியில் ஏற்றிச் சென்ற இருவரை, கற்பிட்டி கடற்படை முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கற்பிட்டி- முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்தே, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக. கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, உரப்பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த, 598 கிலோ கிராம் கடலட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கற்பிட்டி ,உக்குவலை  ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 42, 44 வயதுடையவர்களே, கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களை மேலதிக விசாரணைக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.      ...

Read More »

போதைப் பொருள் எவர் பயன்படுத்துகின்றார்கள் என்பது சபாநாயகரிடம் கையளிப்பு!

கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல்களை சபாநாயகர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையளித்துள்ளதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் செயற்படும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர் ஒருவரும் கொக்கைன் பயன்படுத்துபவர் வரிசையில் இருப்பதாகவும், நீர்கொழும்பு பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர், ஹம்பாந்தோட்டை மாவட்ட மாகாண சபை உறுப்பினரும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள் எனும் தகவல் கிடைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கொக்கைன் உள்ளிட்ட 11 வகையான போதைப்பொருட்கள் பயன்படுத்துகின்றார்களா? என்பது ...

Read More »

மட்டக்களப்பு தாழங்குடா  பகுதியில் விபத்து; ஒருவர் பலி;

சற்று முன்னர் மட்டக்களப்பு,  தாழங்குடா (ஒல்லிக்குளம்)  மண்முனை பிரதான வீதி  வீதியில்  வடி சிறிய ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள்  செலுத்திச் சென்றவர் சம்பவம் நடந்த இடத்திலே, உயிரிழந்துள்ளாரென தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலையை  சேர்ந்த 44 வயதுடைய, எம்.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பிள்ளைகளின் படிப்பிற்காக கல்லடி, நாவற்குடாவில் வாசித்து வந்துள்ள இவர் கொக்கட்டிச்சோலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இவ்வாறு விபத்து நடைபெற்றுள்ளது. அதேவேளை, சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக ...

Read More »

“காதலில் விழுந்தவர்” ரயிலில் விழுந்து மரணம்!!!

யாழ்ப்பாணம் சாகவகச்சேரியில் புகையிரத்திற்கு முன் விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உன்னைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்“ என நண்பருடன் தொலைபேசில் கதைத்தவாறு ரயில் குறித்த இளைஞர் ஒரு உயிரை மாய்த்துள்ளார். ரயிலுடன் மோதுண்ட இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கச்சாயைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.காதல் பிரச்சினை காரணமாக இளைஞன் மனச் ...

Read More »

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமனவர்!!!

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் கோத்தாபய ராஜபக்சவே என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்து விட்டனர்.கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரா- இல்லையா என்பது எனக்குத் தெரியாது. மேற்படி கோத்தபாயவே ஜனாதிபதித் தேர்தலுக்கு மிகப் பொருத்தமானவர் எனவும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இவருக்கும் அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார். ஆனால் அதிபர் தேர்தலில் எந்தக் கட்சி என்பது அதிகம் பிரச்சினையல்ல. யார் ...

Read More »

பகிரங்கப் பிடியாணை உத்தரவு!-யாழ் நீதிமன்றம்

கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பித்த நபர் ஒருவரைக் கைது செய்ய பகிரங்கப் பிடியாணை உத்தரவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேற்படி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் குற்றச்செயல் ஒன்று தொடர்பில் நீதிமன்றப் பிடியாணை உத்தரவில் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு சென்ற பொலிஸார், அவரிடமிருந்து 2 மில்லிக் கிராம் கஞ்சா போதைப்பொருளைக் கைப்பற்றினர். எனினும் அவரிடம் கஞ்சா மீட்கப்பட்ட வழக்கை பொலிஸார் தனியாகத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. ...

Read More »

சாரதியின் கவனயீனத்தால் ஏற்பட்ட மோதல்!!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை சென்.பெட்றிக்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக 18.02.2019 அன்று இரவு 11.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 8 பேரில் 4 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு நுவரெலியா பகுதிக்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை ...

Read More »

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபடவில்லை.-வாசுதேவ நாணயக்கார.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஒருபோதும் யுத்தக்குற்றங்களில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எவ்வாறெனினும் இராணுவ உறுப்பினர்கள் எவராவது தவறிழைத்திருப்பார்களாயின் அதுத் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் வலியுறுத்தியுள்ளார். மேற்படி யுத்தத்தின்போது தனிப்பட்ட ரீதியில் தவறிழைத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தவர்களுக்கு எதிராக உள்நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் கொழும்பில் அமைந்துள்ள சோஷலிச மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் நேற்று ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றது.இதன்போது, ‘ஸ்ரீலங்கா படையினரும் குற்றங்கள் ...

Read More »

கற்பிட்டியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

கற்பிட்டி- கண்டல்குழி ஈச்சன்காடு கடற்கரை பிரதேசத்தில், படகுமூலம் கொண்டுவரப்பட்ட ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன், சந்தேக நபர்கள் இருவர் அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். கற்பிட்டி- கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த, 49 மற்றும் 53 வயதுடையவர்களே, கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதிகாலை 3 மணியளவில், புத்தளம் மாவட்ட போதைப் பொருள்  ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, விசேட சுற்றிவளைப்பு மேற்கொண்ட போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, 20 கிலோ 35 கிராம் நிறையுடைய கேரளக் கஞ்சா ...

Read More »

அதிகாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி; பலர் நிலை ஆபத்தில்;

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி ஒன்றில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகவும், தனியார் பேருந்தின் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலே, இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பலர் பேருந்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Read More »