தமிழ்லீடர்

மத்தல விமான நிலையம் கையாளும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்!

மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை கையாளும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான இறுதி தீர்மானம் இந்த வாரம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 மார்ச் மாதம் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்பட்ட குறித்த விமான நிலையம், பின்னர் ஏற்பட்ட நஷ்டத்தை தொடர்ந்து இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டது.  இருந்தபோதும் அதன் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்திவைக்கப்பட்டது. மேலும் மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு இறுதியாக டுபாய் விமான நிறுவனம் வர்த்தக ...

Read More »

சர்வதேசமே வியக்கும் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டை!!!

யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையின் வான்பார்வைப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியுள்ளது.இலங்கையர்களிடம் மாத்திரமன்றி சர்வதேச மக்கள் மத்தியிலும் இந்த புகைப்படம் பிரபலமாகிவருகின்றமையை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேற்படி யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களான போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டு ஒல்லாந்தரால் மீள் வடிவம் கொடுக்கப்பட்ட இந்த கோட்டை இலங்கையிலுள்ள வான்பார்வைக் காட்சிகளில் மிகவும் அழகானதும் அற்புதமானதுமென ஐரோப்பியர் ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இதேவேளை இந்த புகைப்படம் சிறிலங்கன் விமான நிறுவனத்தின் முகநூல் பக்கத்திலும் இன்றைய தினம் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் ...

Read More »

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜெனீவா விஜயம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவதை தடுக்கும் வகையில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜெனீவாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், மகா சிவராத்திரிக்குப் பின்னரே அவர் நாடு திரும்பவுள்ளார். இதன் பின்னரே, அவர் ஜெனீவாவுக்குப் பயணம் செய்யவுள்ளார் எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.   

Read More »

சுண்ணக்காடு காட்டுப் பகுதிக்குள் அரிய வகை மரை மீட்பு!

கந்தளாய் – சூரியபுர, சுண்ணக்காடு காட்டுப் பகுதிக்குள் வெள்ளை மரையொன்று மீட்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காட்டுப் பகுதிக்குள் விறகு எடுக்க சென்ற இராணுவத்தினர், தாயை விட்டு அநாதரவான நிலையில் இம்மரையை கண்டு அதை, கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மரை, ஈன்று ஒரு மாத காலமாக இருக்கலாம் எனவும் 3 அடி உயரமானதுடன், தொப்புலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வெள்ளை நிறத்தைக் கொண்ட மரையொன்று, சிங்கராஜா காட்டுப் பகுதிக்குள் ஏற்கெனவே  ...

Read More »

மலையக பாடசாலைகளிலும் பரவிவரும் போதை பழக்கம்!!!

நாட்டில் தற்போது போதைவஸ்து புழக்கம் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் நாளாந்தம் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பாடசாலை மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாவனை மலையக பாடசாலைகளிலும் பரவி வருவதாக தெரிய வருகின்றது. மேலும் இந் நிலையில் மலையக மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் சமூகத்தின் கடமையாக இருக்கின்றது. இருந்தும் அனைத்தையும் அவர்களிடம் பொறுப்பளித்து விட்டு பெற்றோர்கள் ஒதுங்கி நிற்க முடியாது.  எனவே அவர்களும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் கவனமாக இருந்து ...

Read More »

பதுளையில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அதிர்ஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் இதன்போது 40 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இந்த வலம்புரி லயன் அறை ஒன்றில் உள்ள அரிசி ...

Read More »

காதலியினால் ஏமாற்றப்பட்ட புலம்பெயர் தமிழர்!!!

முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழனிடமிருந்து 55 லட்சத்தை சுருட்டிக் கொண்டு காதலி தலைமறைவாகியுள்ளார். மேலும் இந்நிலையில் காதலியை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர் பணத்தை பறி கொடுத்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியாவில் வாழ்வதாக கூறி முகப்புத்தகம் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை காதலித்துள்ளார். எனவே அதனை நம்பி குறித்த புலம்பெயர் தமிழர் கோப்பாய் ...

Read More »

விபத்தில் 2 வயது குழந்தை மற்றும் காவற்துறை அதிகாரி பலி!

குருணாகலை – சாரகம. வாவிக்கு அருகில் முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து லொறியொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் காவற்துறை அதிகாரியும், அவரின் மகளும் உயிரிழந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாது போனமையால் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், மாவனெல்லை காவற்துறையில் பணிபுரிந்த 30 வயதுடைய காவற்துறை அதிகாரியும் அவரின் 2 வயது பெண் குழந்தையும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரநாயக்க – தல்கஸ்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்களெனவும், விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த காவற்துறை அதிகாரியின் மனைவி , அவரின் ...

Read More »

குடிபோதையில் இருந்த மூன்று இராணுவத்தினர் கைது!! 

காவற்துறை அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி ஹொரணை – கோனபல பிரதேசத்தில் குடிபோதையில் வாகனங்களை சோதனையிட்ட மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைவாக இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் வரும் போது இவ்வாறு வாகனங்களை சோதனையிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனாகொட இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ அதிகாரிகள் காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறியிடப்பட்டுள்ளது.                ...

Read More »

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பற்றிய கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஸ!

நாட்டின் அரசியல் முறைமையை மேலும் ஜனநாயகப்படுத்தும் போர்வையிலேயே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது, ஆனால் இந்த விடயம் நடைபெற்றதா? பல்வேறு உத்திகளின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவிடம் முக்கிய அதிகாரங்களை வழங்குவதற்கு, அவரின் பதவியை பாதுகாக்கும் வகையில் சட்டங்களை உருவாக்குவதற்கு 19 ஆவது அரசியலமைப்பு கோட்பாட்டாளர்களான எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன போன்ற பிரிவினர் முயற்சித்துள்ளார்கள். இந்த நிலைமையின் கீழ், எந்தவொரு அரசாங்கமும் உரிய முறையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஆவணமாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மாறியுள்ள நிலையில் ...

Read More »